Categories: BiggBoss 8

காதலன் அருணுக்காக விஜய் சேதுபதியை தாக்கி பேசிய பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா..!

வெளியிட்டது

பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். இதுவரை இந்த 18 பேரில் இருந்து ரவீந்தர் மற்றும் அர்னவ் வெளியேறி உள்ளனர். தற்போது நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி நடந்து வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 7சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு படப்பிடிப்புகள் இருப்பதால் அவர் தற்போது விலகி உள்ளார்.

காதலன் அருணுக்காக விஜய் சேதுபதியை தாக்கி பேசிய பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா..! 1

இந்த சீசனில் தொகுப்பாளராக வரும் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் போல இலைமறை காயாக இல்லாமல், நேரடியாகவே முகத்திற்கு நேராக சொல்கிறார். இது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளராக வந்து இருக்கும் சீரியல் நடிகர் அருண் பிரசாத்தை, சில இடங்களில் விஜய் சேதுபதி பேச விடாமல் செய்கிறார்.

தற்போது இந்த வீடியோக்களை பகிர்ந்த பிக் பாஸ் 7வது சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா, அருணுக்கு ஆதரவாக நிற்பதாக கூறி விஜய் சேதுபதியை தாக்கி உள்ளார்.இது பிக் பாஸ் ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை அர்ச்சனா மீது ஏற்படுத்தி உள்ளது. அருணுக்கு அர்ச்சனாவுக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் இவ்வாறு நடந்து கொண்டதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்