பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கும், விஜய் டிவியில் ஹீரோவாக நடித்து வரும் நடிகருக்கும் ஏற்கனவே காதல் என்று கிசு கிசுக்கப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதி செய்யும் விதமாக அர்ச்சனாவின் பதிவு ஒன்று பார்க்கப்படுகிறது. ராஜா ராணி சீசன் 2வில் வில்லியாக நடித்து பிரபலமானவர் அர்ச்சனா. இதில் பல வில்லத்தனங்களை செய்து எதிரிகளை சம்பாதித்து இருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று டைட்டிலும் வென்று இருக்கிறார். இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் அருண் பிரசாத்தும், அர்ச்சனாவும் காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது. சில நாட்களுக்கு முன்பு பிச்சாவரம் காடுகளில் இவர்கள் இருவரும் டூருக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது.
இந்த நிலையில் அர்ச்சனா மற்றும் அருண் ஆகியோரின் காதல் உறுதியாகி இருப்பதாக அர்ச்சனாவின் கமெண்ட் ஒன்றை ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். அதில் அருண் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோ ஷூட்டிங் போது அர்ச்சனாவும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த போட்டோவுக்கு கீழே அர்ச்சனா போட்டோகிராஃபரிடம் என்னுடைய ஹீரோவை புகைப்படம் எடுப்பதற்காக நன்றி எனக் கூறி அவர்களை டேக் செய்து இருக்கிறார். தற்போது இந்த கமெண்ட் மூலமாக அருணை அர்ச்சனா காதலித்து வரும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார்.