ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் இருந்து தற்போது நடிகை ஒருவர் விலகிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீனாட்சி பொண்ணுங்க என்கிற சீரியல் தற்போது நடந்து வருகிறது. இந்த சீரியலில் அம்மாவிற்கும் மூன்று மகள்களுக்கும் இடையேயான பாசத்தை குறித்து தற்போது கதை நகர்ந்து வருகிறது. இந்தத் தொடரில் நடிகை அர்ச்சனா அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இவருடன் இணைந்து மோஷிதா பாய், ஆர்யன், காயத்ரி யுவராஜ், பிரணிகா, ஆனந்தமௌலி, சுபத்ரா, பிரபாகரன், சுகன்யா, தீபா ஷங்கர் உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நாடகத்தில் இருந்து விலகி விட்டதாக தற்போது நடிகை அர்ச்சனா அறிவித்திருக்கிறார். சில நாட்களாகவே அவர் நாடகத்திலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் தற்போது அவர் இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

ஆண் துணை இல்லாமல் தன்னுடைய மூன்று பெண்களையும் கௌரவமாக வளர்த்து வரும் பெண்ணாக நடித்து வத்தார் அர்ச்சனா. இந்த சீரியல் தொடங்கிய நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே சக்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மோஷிதா சீரியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. சக்தி மற்றும் ஆர்யன் பிரிந்து விடுவார்களா இல்லை இருவரும் இணைவார்களா என்கிற விறுவிறுப்பான கதைக்களத்துடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ச்சனா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். எண்பதுகளில் பல முக்கிய படங்களில் நடித்த கவனத்தை ஈர்த்தவர் அர்ச்சனா. தைப்பொங்கல் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் துணிவே தோழன், காதல் ஓவியம், வசந்தமே வருக, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி வைதேகி வந்தாச்சு போன்ற பல படங்களில் நடித்தார்.
பின்னர் பட வாய்ப்புகள் வராமல் போகவே அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றிருக்கும் அர்ச்சனா மீனாட்சி பொண்ணுங்க சீரியல் மூலமாக சின்னத்திரையிலும் என்ட்ரி கொடுத்தார். சில நாட்களாகவே இவர் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அவரை அறிவித்திருக்கிறார். அதில் வணக்கம் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி விட்டேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மீனாட்சி கேரக்டருக்கு கொடுத்த அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. அனைவரையும் இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அதற்கு முன்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த அர்ச்சனா கன்னடத்தில் வெளியான புட்டகன்ன மக்களு என்கிற சீரியலின் தமிழாக்கம் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க என்கிற சீரியல். கன்னடத்தில் செம ஹிட்டான இந்த சீரியல் பற்றியும் அந்த அம்மா கேரக்டர் பற்றியும் எனக்கு பிடித்திருந்தால் இந்த சீரியலில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் கதை போகும் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. பிடிக்காத ஒரு வேலையில் எப்படி வேலை செய்ய முடியும், அதனால்தான் விலகி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். முதலில் தான் விலக இருக்கும் செய்தியை சேனலிடம் அர்ச்சனா தெரிவித்து நிலையில் அவரை சமாதானம் செய்ய சேனல் தரப்பு முயற்சி செய்திருக்கிறது ஆனாலும் சீரியலில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அர்ச்சனா.