Categories: சினிமா

பிரபல தமிழ் காமெடி நடிகரின் மகனை திருமணம் செய்ய போகும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.! புது தகவல்

வெளியிட்டது

பிரபல நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜீனின் மகள் பிரபல தமிழ் காமெடி நடிகரின் மகனை திருமணம் செய்ய இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ஆர்ஜூன். 1981ம் ஆண்டு கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமான இவர், 1984ம் ஆண்டு நன்றி என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் பல மொழிகளில் இவர் நடித்திருக்கிறார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த இரு படங்கள் என்றால் முதல்வன், ஜென்டில் மேன் போன்ற படங்களை சொல்லலாம். தற்போது பல படங்களில் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார் அர்ஜீன். அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தமிழ் திரையுலகில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். விஷால் நடிப்பில் உருவான பட்டத்து யானை என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ஐஸ்வர்யா. பின்னர் அர்ஜூன் இயக்கத்தில் வெளியான “சொல்லி விடவா?” என்ற படத்தில் நடித்தார். 2018ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்குப் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிப்புக்கு முழுதாக முழுக்கு போட்டுவிட்டு தனிப்பட்ட வாழ்க்கையை கவனிக்க சென்றுவிட்டார் ஐஸ்வர்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரபல தமிழ் காமெடி நடிகரின் மகனை திருமணம் செய்ய போகும் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா.! புது தகவல் 1
இந்த நிலையில் ஐஸ்வர்யாவும், பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகனும் காதலித்து வருவதாக சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது இந்த தகவலை தம்பி ராமையாவே உறுதி செய்துள்ளார். தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா அதாகப்பட்டது மஹா. ஜனங்களே, தண்ணி வண்டி, மணியார் குடும்பம், சேரனின் திருமணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜாக்கிளி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தம்பி ராமையா கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார் உமாபதி. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜீன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சி மூலமாக உமாபதிக்கும், அர்ஜூன் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாக பரவத் தொடங்கியது. ஆனால் இதை இரு தரப்பினரும் மறுக்கவே இல்லை.


மேலும் அர்ஜூன் சென்னையில் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து தம்பி ராமையா குடும்பமும், அர்ஜூன் குடும்பமும் பேசி திருமண ஏற்பாடுகளை நடத்தி வருவதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் தம்பி ராமையாவிடம் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர், “வருகிற தை மாதம் அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உமாபதி-ஐஸ்வர்யா திருமணம் நடைபெறும்” என்று கூறினார். மேலும் திருமண தேதி உமாபதியின் பிறந்தநாளான நவம்பர் 8-ம் தேதி வெளியிடப்படும் என்றும் தம்பி ராமையா தனது பேட்டியில் கூறினார். அந்த செய்தியை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: ABP Nadu

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்