கர்ப்பமாக இருப்பதை அறிவித்த செவ்வந்தி சீரியல் நடிகை.! அர்னவ் திவ்யாக்கு பாப்பா பிறக்க போகுது

வெளியிட்டது

சன் டிவி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கும் விஜய் டிவியில் செல்லம்மா தொடரில் கதாநாயகனாக நடித்து வரும் அருணுக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் இருவரும் தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர் அதாவது தங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி எனும் தொடர் மூலமாக அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீதர் பின்னர் இவர் மகராசி என்னும் தொடரில் நடித்து வந்தார் மகராசி தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது ஆனால் திடீரென திவ்யா ஸ்ரீதர் அந்த நாடகத்தில் இருந்து விலகினார் தற்போது ஸ்ரீத்திகா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த செவ்வந்தி சீரியல் நடிகை.! அர்னவ் திவ்யாக்கு பாப்பா பிறக்க போகுது 1

இதனிடையே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு தொடரான செவ்வந்தி என்ற தொடரிலும் முதன்மை கதாபாத்திரத்தில் திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். செவ்வந்தி தொடரும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே திடீரென ஒரு நாள் திவ்யா ஸ்ரீதரும் கேளடி கண்மணி தொடரில் தன்னுடன் சேர்ந்து நடித்த வருமான அர்னவை திருமணம் செய்து கொண்ட வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது எளிமையான முறையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு வரத ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வந்தனர் இந்த நிலையில் instagram பக்கத்தில் திவ்யா ஸ்ரீதர் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

 

எங்கள் அழகான பயணம் 2017 இல் கேளடி கண்மணியில் இருந்து தொடங்கியது. நாங்கள் ஒருவரையொருவர் அங்கிருந்து அறிந்தோம், அந்த உண்மையான புரிதல் இன்று வரை நீடிக்கிறது. இறுதியாக நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம், 5 வருட ஒற்றுமை, அன்பு, கவனிப்பு, சண்டைகள், வாக்குவாதங்கள், ஆனால் இன்னும் இரு வேறு மரபுகளில் நாங்கள் இணைந்திருப்பதாலும், பல நல்ல உள்ளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டதாலும் நாங்கள் நிச்சயமாக அதிர்ஷ்டமான ஜோடிகளில் ஒருவர் என்று நினைக்கிறேன். எங்களின் சொந்தக் கனவு இல்லத்தில் காலடி எடுத்து வைப்பதன் மூலம் எங்கள் வாழ்வின் மிகப்பெரிய இலக்கை அடைந்துள்ளோம்.

இப்போது, ​​​​நாங்கள் எங்கள் வாழ்க்கையின் மிக அற்புதமான மற்றும் பொறுப்பான அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளோம், விரைவில் நாங்கள் எங்கள் குழந்தையை எதிர்பார்க்கிறோம். காதலர்களாகவும், மனைவிகளாகவும், இப்போது பெற்றோராகவும் இதை எப்போதும் போற்றுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள் அளித்த அளப்பரிய அன்புக்கும் ஆதரவுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என பகிர்ந்து இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்