ஏற்கனவே 5 வயது பெண் குழந்தைக்கு தாய்.! அர்னவுடன் 2வது திருமணம்.! கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த திவ்யா ஸ்ரீதர்

வெளியிட்டது

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் திவ்யா ஸ்ரீதரின் முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்போது விவாகரத்து ஆனது? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. திவ்யா ஸ்ரீதருக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை இருக்கும்போது,அவர் தற்போது விஜய் டிவியில் நடித்து வரும் நடிகர் அர்னவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளதும், கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளதும் தற்போது தீயாக பரவி வருகிறது.

ஏற்கனவே 5 வயது பெண் குழந்தைக்கு தாய்.! அர்னவுடன் 2வது திருமணம்.! கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த திவ்யா ஸ்ரீதர் 1

பெங்களூரில் பிறந்து வளர்ந்த திவ்யா ‘பல்லக்கி’ என்னும் கன்னட திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கினார். கன்னடத்தில் அக்ஷதிபா என்னும் சீரியலில் தீபா என்னும் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். பின்னர் தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி, மகராசி போன்ற தொடர்களில் நடித்து வந்தார். தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை திவ்யா ஸ்ரீதர் தன்னுடன் கேளடி கண்மணி சீரியலில் நடித்து வந்தவரான அர்னவ் அம்ஜத் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அந்த வீடியோக்கள் வெளியான போது அது விளம்பர படம் என்று கூறப்பட்டது. ஆனால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அர்னவை திருமணம் செய்து கொண்டதையும், தான் தற்போது கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் நேற்று அறிவித்திருந்தார் திவ்யா ஸ்ரீதர்.

அர்னவ் கேளடி கண்மணி என்னும் சீரியலில் திவ்யாவுடன் நடித்து வந்தார். பின்னர் சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலில் சித்துவாக நடித்து வருகிறார். அர்னவ் மற்றும் திவ்யாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தாங்கள் திருமணமான செய்தியை உறுதிப்படுத்தி இருந்தார் திவ்யா. மேலும் தங்களின் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால் திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதை ஒரு தனியார் பத்திரிக்கைக்கு கொடுத்த நேர்காணலில் அவரே தெரிவித்து இருந்தார். தனது இன்ஸ்டாகிராமில் அந்த பத்திரிகையின் நேர்காணலையும் அவர் பகிர்ந்து இருந்தார். மேலும் தனது மகள் ஜெய்ஷனா உடன் இருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். ஐந்து வயது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு எனது இளவரசி என்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் திவ்யாவின் முதல் திருமணம் என்ன ஆனது? விவாகரத்து பெற்றாரா இல்லையா? என்பதெல்லாம் தெரியவில்லை. அர்னவுடன் நடந்த திருமண புகைப்படங்களை மட்டும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்