Categories: அரசியல்

சசி தரூருக்கு பிடிவாரண்ட்!

விசாரணைக்கு ஆஜராகாததால் காங்கிரஸின் மூத்த தலைவரும் எம்பியுமான சசிதரூருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989ஆம் ஆண்டு ‘தி கிரேட் இந்தியன் நாவல்’ என்ற புத்தகம் வெளியானது. இப்புத்தகத்தின் ஒரு பகுதியில் கேரளாவின் நாயர் பெண்களுக்கு எதிராக இருப்பதாக புகார் எழுந்தது.

சசி தரூருக்கு பிடிவாரண்ட்! 1
சசி தரூர்.

நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட சம்மனில் ஆஜராகும் தேதி குறிப்பிடப்படவில்லை. நேரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலேயே எங்கள் வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். எனவே தேதியிட்டு புதிய சம்மன் வரும் என்றார்கள். ஆனால் இதுவரை எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என சசிதரூரின் அலுவலகத்தில் கூறப்படுகிறது.

சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியைக் கொண்டு, நாட்டின் விடுதலையின் முதல் 30 ஆண்டுகளில் நடந்ததை மகாபாரத மாதிரியில் எழுதப்பட்ட புத்தகமே இந்த ‘தி கிரேட் இந்தியன் நாவல்’

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்