Categories: சினிமா

பண்டிகை தினத்தில் ஒன்றாக இணைந்த அருண் விஜய் குடும்பம்.! குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய அருண் விஜய்

வெளியிட்டது

நடிகர் அருண் விஜய் இன்று தனது சகோதரி மற்றும் தாய் தந்தையுடன் இணைந்து பொங்கல் திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பண்டிகை தினத்தில் ஒன்றாக இணைந்த அருண் விஜய் குடும்பம்.! குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய அருண் விஜய் 1

பலரும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அருண் விஜய். இவர் பிரபல பழம்பெரும் நடிகராக இருக்கும் விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்.

1995ம் ஆண்டு வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் ‘கங்கா கௌரி’, ‘பாண்டவர் பூமி’, ‘முத்தம்’, ‘இயற்கை’, ‘தவம்’, ‘துணிச்சல்’, ‘மாஞ்சா வேலு’, ‘தடையறத் தாக்க’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பின்னர் 2015ம் ஆண்டு ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்ததன் மூலமாக இவர் மீண்டும் திரைத்துறையில் கவனம் பெற்றார். அதன் பிறகு ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘தடம்’, ‘ஓ மை டாக்’, ‘யானை’, ‘சினம்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மிஷன் சாப்டர் ஒன்’ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்திலும், ‘பார்டர்’ என்கிற படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்கிற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் அருண் விஜய் தொடர்ந்து பண்டிகைகளில் தனது குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அதை பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இந்த வருடம் பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடி அவர் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். பலரும் அருண் விஜய்க்கு பொங்கல் நல்வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்