பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். சினிமாவில் எளிதாக அறிமுகமாகி இருந்தாலும் வெற்றி என்பது இவருக்கு எட்டாமல் இருந்தது. தொடர்ந்து சினிமாவில் வெற்றிபெற போராடிய இவருக்கு தோல்விகள் மட்டுமே பரிசாக கிடைத்து இருந்தது. இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து இருந்தார். இப்படம் இவரின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்டது.

இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அருண்விஜய். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான யானை மற்றும் மிஷன் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதனை தொடர்ந்து இவர் ரெட்டை தலை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. அதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு நடிகர் அருண் விஜய் விருந்து கொடுத்து உள்ளார். இந்த வீடியோவை படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி வெளியிட்டு உள்ளார். வீடியோவில், பிரியாணியை இயக்குனருக்கு கொடுத்து கலாய்த்து உள்ளார் சித்தி.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.