பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமார் அவர்களின் மகன் நடிகர் அருண் விஜய். இவர் 1995ம் ஆண்டு வெளிவந்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் தொடர்ந்து இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை. கங்கா கௌரி, இயற்கை போன்ற பல படங்களில் நடித்தார். பின்னர் பாண்டவர் பூமி படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது எனக்கூறலாம். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் அருண் விஜய். 2015ம் ஆண்டில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக என்ட்ரி கொடுத்து இருந்தார் அருண் விஜய். இதில் அஜீத்துக்கு வில்லனாக நடித்து இருப்பார். அதைத் தொடர்ந்து தடம், செக்கச் சிவந்த வானம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் “யானை”. இதை அருண் விஜய்யின் தங்கை பீர்த்தாவின் கணவர் இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முதல் தாரத்திற்கு பிறந்த அண்ணன்களை தனது சொந்த அண்ணன்களாக அருண் விஜய் பாவித்து பாசத்தை காட்டி வருகிறார். நிஜத்திலும் அப்படிதான். நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள். இதில் மூத்த மனைவியின் மகன் தான் அருண் விஜய். விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான நடிகை மஞ்சுளாவிற்கு வனிதா, ஸ்ரீதேவி, பீர்த்தா மூன்று மகள்கள் மட்டுமே. ஆனாலும் அருண் விஜய் தனது சொந்த தங்கைகளாகதான் பார்த்து வருகிறார்.
ஆனால் வனிதாவுடன் குடும்பத்தினர் யாரும் பேசுவதில்லை. அவரது சகோதரிகள், சகோதரர் அருண் விஜய் ஆகியோர் கூட வனிதாவை ஒதுக்கி வைத்துவிட்டனர். சமீபத்தில் கூட ஒரு குடும்ப விழாவில் சகோதர சகோதரிகள் அனைவரும் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதில் வனிதா எங்கே? ஏன் அவரை ஒதுக்கி விட்டீர்கள் என்று கமெண்ட்டில் பலர் கேள்வி எழுப்பினார்கள். இதனால் நெகிழ்ந்து போனார் வனிதா. மக்கள் தன் மேல் காட்டும் அன்பினால் அவர் தனது போக்கை மாற்றிக் கொண்டுள்ளார். யானை படத்தை வாழ்த்தி வனிதா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து கடின உழைப்பும், முயற்சியும் தோல்வியடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் அருண் விஜய், அதில் படத்தில் மட்டும் குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள் ஆனால் உங்கள் குடும்பத்திலேயே ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்கள் என்று வனிதா குறித்து மறைமுகமாக கேட்டார். இதற்கு பதிலளிக்காமல் அருண் விஜய் சிரித்துக் கொண்டே கடக்க முயன்றார். அப்போது பின்னால் இருந்தவர் படத்தைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று அறிவுறுத்தினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Open Mic Tamil