Categories: சினிமா

தனது குட்டி மகளை முதல் முறையாக காட்டிய ஆர்யா.! ஆர்யாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள்

வெளியிட்டது

நடிகர் ஆர்யா தற்போது தனது மகளை முதன்முறையாக பொதுவெளியில் காட்டி அவரது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி உள்ளிட்ட 25 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து படங்களில் நடித்த தொடங்கினார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு படம் என்று சொன்னால் அது நான் கடவுள் தான். இந்த படத்தில் அகோரியாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஆர்யா. அதற்கு இவருக்கு படங்கள் குவிய தொடங்கியது.

தனது குட்டி மகளை முதல் முறையாக காட்டிய ஆர்யா.! ஆர்யாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் மகள் 1

அதற்குப் பின்னர் மதராசபட்டினம் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பின்னர் காமெடியிலும் தன்னால் கலக்க முடியும் என்று நிரூபிக்க படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன். அதன் பின்னர் விஷாலுடன் இணைந்து அவன் இவன் என்கிற படத்திலும் அவர் நடித்தார். குறுகிய காலத்திலேயே பல படங்களில் நடித்து வந்த அவர் நயன்தாராவுடன் இணைந்து ராஜா ராணியில் நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி சட்டை போடு போட்ட படம் என்று சொன்னால் அது சார்பட்டா பரம்பரை தான். இந்த படத்திற்கு பின்னர் அவருக்கு செல்வாக்கு கூடியது. தற்போது அவர் காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அந்த போஸ்டர் நேற்று வெளியாகி இருந்தது. தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வரும் ஆர்யா 2019 ஆம் ஆண்டு சாயிஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருக்கு 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையை முதல் முறையாக தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார் ஆர்யா. அப்படியே ஆர்யா போலவே உரித்து வைத்திருக்கிறார் அவரது மகள். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இத்தனை நாள் தனது மகளை வெளியில் காட்டாமல் இருந்த ஆர்யா தற்போது முதல் முறையாக அவரது புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்