Categories: சினிமா

ஆர்யா மகளின் 2-வது பிறந்தநாள்.! மும்பையில் உள்ள வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய ஆர்யா.! இதோ வீடியோ.!

வெளியிட்டது

நடிகர் ஆர்யா மகள் அரியானாவின் இரண்டாவது பிறந்தநாளுக்கு தற்போது ஆர்யாவின் மனைவி சாயிஷா கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஆர்யா மகளின் 2-வது பிறந்தநாள்.! மும்பையில் உள்ள வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய ஆர்யா.! இதோ வீடியோ.! 1

அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யா, 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார்.

அதன் பின்னர் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தற்போது தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருக்கிறார். ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, ராஜா ராணி உள்ளிட்ட பல நல்ல படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளியான நான் கடவுள் மற்றும் அவன் இவன் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.


இவர் கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது மிஸ்டர் எக்ஸ் என்கிற படத்திலும், சைந்தவ் என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் ஆர்யா.


படங்களில் பிசியாக நடித்து வந்த இவருக்கு தன்னுடன் நடித்து வந்த சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது அரியானா என்கிற மகளும் இருக்கிறார். அரியானா தற்போது இரண்டு வயதை கடந்து இருக்கிறார். அவருக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.


அதற்காக வீடு முழுவதும் மலர்களால் அலங்கரித்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் சாயிஷா. அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் அரியானாவின் இரண்டாவது பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறது..!

YouTube Video Embed Code Credits: Sayyeshaa

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்