Categories: சினிமா

ஏலியன்னு சொல்லி ஆக்டோபஸ காட்றாங்க.! உக்கார முடில..தூங்கிட்டேன்..கேப்டன் படத்தை கழுவி ஊற்றிய பொதுமக்கள்

வெளியிட்டது

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் படம் தற்போது தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஆர்யா நடிப்பில் கடைசியாக உருவான படம் டெடி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவுடன் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் ‘கேப்டன்’ என்ற படத்தில் இணைந்திருந்தார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கின்றன. அறிவியல் மற்றும் மிருகங்களை மையப்படுத்தி படங்களை எடுப்பதில் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் கை தேர்ந்தவராக இருக்கிறார். இவர் இயக்கத்தில் மிருதன், டிக் டிக் டிக், டெடி, நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏலியன்னு சொல்லி ஆக்டோபஸ காட்றாங்க.! உக்கார முடில..தூங்கிட்டேன்..கேப்டன் படத்தை கழுவி ஊற்றிய பொதுமக்கள் 1

தொடர்ந்து அடுத்து ஏலியன் கதையை மையப்படுத்தி கேப்டன் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன். இந்தப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரி உத்தமன் உள்ளிட்டவர் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து யுவன் பாடிய நினைவுகள் என்ற பாடல் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்று இருந்தது. இந்தப் படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் ஆர்யா நடித்திருக்கிறார். ஏலியன்களை ஒழிக்கும் முயற்சியில் இருக்கும் இராணுவ குழுவை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் இன்று காலை 5 மணிக்கே வெளியானது. படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் நெகடிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர். ஏலியன் என்ற பெயரில் நாய் போல ஒன்றை காட்டுகிறார்கள் என்றும் அனிமேஷன் மிக மோசமாக இருந்ததாகவும் கூறினர். மக்கள் கூறிய கருத்துக்களை நீங்களும் காண.. Watch the below Video..

Youtube Video Code Embed Credits: Chennai Day

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்