Categories: Bigg Boss Tamil 6

பெண்களிடம் தொடர்ந்து சேட்டை செய்த அசல் கோளாறு.! கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய பிக்பாஸ்.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சர்ச்சையான போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். பலரும் அவரை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று அசல் கோளாறை பிக்பாஸ் டீம் வெளியேற்றி இருக்கின்றது. இது இந்த சீசனின் இரண்டாவது வெளியேற்றம் ஆகும். பிக்பாஸ் சீசன் 6 கடந்த ஒன்பதாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். 20 போட்டியாளர்கள் முதல் நாளே உள்ளே சென்ற நிலையில் மைனா 21வது ஆளாக வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே சென்றார். 20 நாட்களை கடந்துவிட்ட நிலையில் ஜி பி முத்துவும் சாந்தியும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தனர். ஹாட் ஸ்டாரில் லைவ்வாக ஒளிபரப்பிய காரணத்தால் பலரின் உண்மை முகம் வெளிப்பட்டது.

பெண்களிடம் தொடர்ந்து சேட்டை செய்த அசல் கோளாறு.! கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய பிக்பாஸ்.! 1

இந்த நிலையில் இரண்டாவது எலிமினேஷனாக அசல் கோளாறை பிக்பாஸ் டீம் இன்று வெளியேற்றி இருக்கிறது. பெண்களிடம் அவர் நடந்து கொள்ளும் முறை முகம் சுளிக்க வைத்தது. குறிப்பாக நிவாஸினியிடம் அவர் அத்துமீறி தொடுவது, கட்டிப்பிடிப்பது என்று பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் விதத்தில் நடந்து கொண்டார் அசல் கோளாறு. இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அவர் மீது தொடர்ந்து விமர்சனங்களையும் மீம்ஸ்களையும் போட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அசல் கோளாறு, பெண்களின் கைகளைப் பிடித்து கடிப்பது, அவர்கள் தோள்களைப் பிடித்து கடிப்பது, கட்டிப்பிடிப்பது, பெண்கள் அமர்ந்திருக்கும் போது அவர்கள் மீது கால்களை தூக்கிப்போட்டு அமர்வது என்று விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டார்.

இது நாளுக்கு நாள் பிரச்சனைகளை கிளப்பி வந்தது. உலகத்தில் உள்ள பலரும் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு இவ்வாறு செய்யும் அசல் கோளாறையும் அசிமையும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று பலரும் கமலஹாசனை டேக் செய்து twitter-ரில் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வார நாமினேஷனில் அசல் கோளாறு இடம் பெற்றது முதலே அவருக்கு குறைவான வாக்குகளை கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் நம் வலைதள பக்கத்தில் நடத்திய வாக்கெடுப்பிலும் அசல் கோளாறு கடைசி இடத்தையே பிடித்திருந்தார். தற்போது அசல் கோளாறை அதிகாரப்பூர்வமாக பிக்பாஸ் டீம் வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

View Comments

வெளியிட்டது

புதிய செய்திகள்