நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து தங்களுடைய தல பொங்கலை கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு என்று ஒரு பண்டிகை இருக்கும் என்று சொன்னால் அது பொங்கல் பண்டிகை தான்.

உலகத்தின் மூலை முடுக்கில் தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் இந்த பண்டிகையை கொண்டாட தவறுவதில்லை. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வார்த்தைக்கு ஏற்ப புத்தரிசி, புதுப்பானை, புது வெல்லம், புது மஞ்சள் என அனைத்தும் புது வரவாக தான் இருக்கும். இந்த பண்டிகையை மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து கொண்டாடி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அந்த புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் திருமணம் முடித்த நடிகர் அசோக் செல்வன் தங்களது இல்லத்தில் பொங்கல் வைத்து விழாவை கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தற்போது அசோக் செல்வன் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அசோக் செல்வன்.
இவர் 2013ம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். இவருக்கு ‘தெகிடி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் அவர் கடைசியாக நடித்திருந்த ‘சபாநாயகன்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. ஆனால் அதற்கு முன்பாக அவர் நடித்திருந்த ‘போர் தொழில்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இந்த நிலையில் கடந்த வருடம் பிரபல தயாரிப்பாளரான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை அவர் திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த தம்பதிகள் தற்போது தங்களுடைய தல பொங்கலை கொண்டாடி அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகளும் குவிந்து வருகிறது.