Categories: சினிமா

பிரம்மாண்டமாக நடந்த அசோக் செல்வன் திருமண வரவேற்பு.! வந்து குவிந்த பிரபலங்கள்.!

வெளியிட்டது

நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது.

பிரம்மாண்டமாக நடந்த அசோக் செல்வன் திருமண வரவேற்பு.! வந்து குவிந்த பிரபலங்கள்.! 1

இந்த வரவேற்பில் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தியுள்ளனர்.

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் அசோக் செல்வன். சூது கவ்வும் என்கிற படத்தில் மூலமாக அறிமுகமான இவர் பின்னர் தெகிடி, பீட்சா 3 போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவரின் சில படங்கள் வெற்றி படங்களாக அமையாத நிலையில் தற்போது அவர் போர் தொழில் என்கிற படத்தில் நடித்திருந்தார்.

சரத்குமார் உடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக இவர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது திருமணத்தையும் நடத்தி முடித்திருக்கிறார் அசோக் செல்வன்.

பிரபல நடிகராக இருக்கும் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து ‘ப்ளூ ஸ்டார்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளனர். இந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் இவர்களின் திருமணம் திருநெல்வேலியில் உள்ள இட்டேரியில் அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் வைத்தே நடந்து முடிந்திருந்தது. திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வராத நிலையில் நேற்று சென்னையில் ரிசப்ஷன் நடந்து முடிந்துள்ளது.


இந்த ரிசப்ஷனில் நடிகர்கள் பலரும் நேரில் வந்து புதுமண தம்பதிகளை வாழ்த்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

நடிகர்கள் கார்த்தி, சூர்யா, ஹரிஷ் கல்யாண், சாந்தனு, வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நேரில் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்