விஜய் டிவியின் ஹிட் சீரியலான ‘ஆஃபிஸ்’ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலம் “அஷ்வின்” பற்றி அறியாதவர் இருப்பாரில்லை. பின்னர் விஜய் டிவி சின்னத்திரையில் முன்னனி கதாநாயகனாக நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி சீசன் 2 ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் பிரபலமானார். ரசிகர்கள் பலர் சம்பாதித்தார். அவர் விளம்பரங்களிலும், பல ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அவருடைய “குட்டி பட்டாஸ்” ஆல்பம் பாட்டு செம ஹிட். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சின்னத்திரையிலும் நடித்துள்ளார். ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோவாக நடித்துள்ளார். வெப் சீரிஸ் பலவற்றில் துணை வேடத்தில் நடித்துள்ளார். அவ்வாறு மீண்டும் தெலுங்கில் வெளியாகவுள்ள வெப் சீரிஸ் ஆன “மீட் க்யூட்” இல் அஸ்வின் நடிப்பதாகவும் அந்த சீரிஸை தெலுங்கு பட
நடிகர் நானி தான் தயாரிப்பாளர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் ஐந்து கதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பாகும். அஸ்வினுடன் சேர்ந்து சுனைனா , அதா சர்மா , வர்ஷா பொல்லம்மா, அகான்ஷா சிங் , ருஹானி சர்மா , சஞ்சிதா பூனாச்சா என ஆறு கதாநாயகிகள் நடிக்கப் போவதாகவும் செய்தி பரவி வருகிறது. ஏனெனில் இப்படம் ‘அன்தாலஜி’ என்பதால் மொத்தம் 6 நடிகைகளா என்ற கேள்வியும் எழுகிறது.