Categories: அரசியல்

தமிழகத்தில் சட்டசபை ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது!

வெளியிட்டது
தமிழகத்தில் சட்டசபை ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது! 1

தமிழகத்தில் நீண்ட நாட்களாக தள்ளி போன உள்ளாட்சி தேர்தல் தற்போது நட‌க்கு‌ம் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் களத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.

இது 2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்த உள்ளார்.இந்த அறிவிப்பை தொடர்ந்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் 6-ம் தேதி கவர்னர் உரையுடன் காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது.

இந்த கூட்டம் எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து 6-ம் தேதி அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்