நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் அஸ்வின்(Asvins) படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. தரமணி, ராக்கி ஆகிய படங்களின் மூலமாக கவனம் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி. இந்த படத்தை இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான தருண் தேஜா இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படம் சைக்கலாஜிக்கல் ஹாரர் வகையை சேர்ந்தது. மனித உலகிற்கு தீமையை பரப்பும் 1500 ஆண்டு பழமையான சாபத்திற்கு பலியாகும் யூடியூபர்கள் குழுவை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனத்தின் சார்பில் பிரசாத் தயாரித்துள்ளார். பாபிநீடு பி இந்த படத்தை விநியோகித்திருக்கிறார். இணை தயாரிப்பாளராக பிரவீன் டேனியல் இருக்கிறார். இந்த படத்தில் நடிகை விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன் உதயதீப் மற்றும் சிம்ரன் பரிக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு விஜய் சித்தார்த் என்பவர் இசையமைக்கிறார். எட்வின் சகே ஒலிப்பதிவு செய்கிறார். வெங்கட்ராஜன் படத்தொகுப்புகளை பணிகளை செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. வித்தியாசமாக உருவாகி இருந்த இந்த போஸ்டர் கவனம் பெற்று இருந்தது. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ் தெலுங்கு என்று இரு மொழிகளில் உருவாகி இருக்கிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்தது தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் மே மாதம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல டிஜிட்டல் நிறுவனம் நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது. நடிகர் வசந்த் ரவியின் பிறந்த நாளை ஒட்டி இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கிறார்.
பீட்சா படம் போல இந்த படமும் ஒரு வீட்டை சுற்றி மையமாக வைத்து நடக்கிறது. எல்லாருக்குள்ளேயும் இரண்டு உயிர், எல்லார் தலைக்குள்ளேயும் இரண்டு குரல், இரண்டு மைண்ட். ஒரு உலகில் கண் மூடினால், மறு உலகில் கண் திறப்போம் அந்த உலகில் மூச்சு இருந்தாலும் பயம், மூச்சு இல்லை என்றாலும் பயம் போன்ற வசனங்களுடன் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரை பார்க்கும் பொழுது இது கண்டிப்பான த்ரில்லர் ஹாரர் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த டீசர் வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Venkateswara Cine Cithra