Categories: சினிமா

“அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ள அதுல்யா ரவி….ஒரு வேலை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிகிட்டாங்களா?

வெளியிட்டது

"அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ள அதுல்யா ரவி....ஒரு வேலை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிகிட்டாங்களா? 1

அதுல்யா ரவி தமிழில் இப்பொது வரை பெரிய பெரிய படவாய்ப்புகள் இல்லை என்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயனான முகம். “பால்வாடி காதல்” என்ற யூடியூப் சென்சேஷன் குறும்படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சமூகவலைத்தளங்களில் நல்ல வைரலான நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தது. “காதல் கண்கட்டுதே” என்ற புதுமுகங்கள் இணைந்து உருவாக்கிய படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். படம் பெரிய வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிட்சயமானார்.

பின்னர் நடிகர் பின்னர், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கதாநாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.  அடுத்தடுத்த படவாய்ப்புகள் வரத்துவங்கிய நிலையில் “ஏமாளி” என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து புயலை கிளப்பினார். அது வரையில் பரிட்சயம் இல்லாத ரசிகர்களுக்கு கூட இதன் மூலம் மிகவும் பரிட்சயமானார். பின்னர் தொடர்ந்து நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2, ஏன் பெயர் ஆனந்தன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

அண்மையில் சந்தனு ஜோடியாக முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் கொஞ்சம் கவர்ச்சி கூட்டி நடித்திருந்தார். தற்போது வட்டம் எண்ணித் துணிக உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் னைத்து வரும் இவருக்கு சமூகவலைத்தளங்களிலும் நல்ல பின்தொடருபவர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது போட்டோஷூட்களும், விடீயோக்களும் வெளியிட்டு கொண்டே இருக்கிறார் இவர். இவர் அண்மையில் வெளியிட்ட வீடியோ தான் இப்பொது மிகவும் பேசப்பட்டு வருகிறது.

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மூக்கு, உதடு என பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கின்றனர். தற்போது அந்த லிஸ்டில் அதுல்யாவும் சேர்ந்து விட்டாரா என்று தெரியவில்லை.அந்த போட்டோவில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார். அவர் முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்