இயக்குனர் அட்லி தனது மகனின் பிறந்தநாளை தற்போது பாரிஸில் உள்ள டிஸ்னி வேர்டில் கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அட்லி. இவர் தமிழில் வெளியான ‘ராஜா ராணி’ என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

அதன் பின்னர் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என்கிற படங்களை இயக்கினார். தொடர்ந்து நான்கு படங்களுமே வெற்றி படங்களாக இவருக்கு அமைந்தது. பின்னர் பாலிவுட்டிற்கு சென்ற அவர் ‘ஜவான்’ படத்தை ஷாருக்கானை வைத்து இயக்கினார். இந்த படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை குறித்து சாதனை படைத்திருந்தது. இது மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அட்லி. தற்போது அட்லி அடுத்த என்ன செய்ய இருக்கிறார்? என்ற ஆர்வம் ரசிகர்களே எழுந்திருக்கும் நிலையில், எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அட்லி தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து பாரிஸில் உள்ள டிஸ்னி வேர்ல்ட்க்கு சென்றிருக்கிறார். அங்கு மகனின் முதல் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அட்லீயும் நடிகை பிரியாவும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரியா தாய்மை அடைந்திருந்தார். கடந்த வருடம் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்து பிரம்மாண்டமான முறையில் வளைகாப்பையும் நடத்தி இருந்தார் அட்லி.
8 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. தனது மகனுக்கு ‘மீர்’ என பெயர் வைத்திருப்பதாகவும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மீருக்கு ஒரு வயது முடிந்திருக்கும் நிலையில், முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாரிஸில் இருக்கும் டிஸ்னி உலகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கிருந்து பிரியா சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
புகைப்படங்களை பகிர்ந்த அவர், “உனக்கு ஒரு வயதாகி விட்டது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை, உன்னை போன்ற அழகான பரிசை அளித்த இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். எங்களுடைய மகிழ்ச்சியின் மொத்த உருவம் நீ, இன்று ஒரு வயதை எட்டி விட்டாய் உன்னுடைய அம்மாவும் அப்பாவும் உன்னை எப்பொழுதும் நேசிப்போம். கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று பகிர்ந்து இருக்கிறார். மீருக்கு அட்லியின் ரசிகர்கள் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.