நாம் அனைவரும் ஆவலாக எதிர்பார்க்கும் திரைப்படம் தான் விக்ரம். சில ஆண்டுகளுக்குப் பின் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளதால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது “விக்ரம்” திரைப்படம். இந்த படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் ப்ரோமோ காட்சிகள் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தல பத்தல பாடல் வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள இந்த பாடலை கமலே எழுதி பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஆண்டவர் போட்ட குத்து சாங் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. Youtube Video Code Embed Credits: Vijay Television
இதில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிம்பு, இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட சிம்பு, பத்தல பத்தல பாட்டுக்கு சாண்டியுடன் இணைந்து கமல் போலவே குத்தாட்டம் போட்டார். தற்போது இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோ வரும் ஞாயிறு ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the Video Below..