நேற்று உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான அவதார் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவதார் திரைப்படம் பாகம் ஒன்று கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் 300 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. 13 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த படம் வெளியாகியிருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் முதல் பாகம் காடுகளை மையப்படுத்தி எடுத்திருந்தார்கள். இரண்டாம் பாகத்தை கடலை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதை குறித்து பார்த்தால், ராணுவத்தில் பதிவு புரியும் கதாநாயகன் பண்டோரா என்னும் இடத்தை அழிப்பதற்காக செல்கிறார். பின்னர் அங்கு அந்த மக்களின் வாழ்க்கை புரிந்து கொண்டு அவரும் அந்த மக்களாகவே மாறி விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
![]()
இதை தெரிந்து கொண்ட வில்லன் படையெடுத்து பண்டோராவை அழிக்க நினைக்கிறார். பின்னர் அந்த ராணுவத்திடம் போராடி எப்படி கதாநாயகன் பண்டோராவை மீட்டார் என்பது தான் அவதார் திரைப்படத்தின் முதல் பாகம். தற்போது இரண்டாம் பாகத்தில் ஹீரோ அந்தக் குழுவின் தலைவனாகவும் நான்கு குழந்தைகளுக்கு தகப்பனாகவும் இருக்கிறார். மீண்டும் வில்லன் ஹீரோவை அழிப்பதற்காக க்ளோனிங் செய்யப்பட்டு மறுபடியும் வருகிறார். இதை தெரிந்து கொண்ட ஹீரோ இங்கு இருந்தால் நம் பண்டோரா இனத்தையே அழித்து விடுவார்கள் என்று சொல்லி அவர் கடல் வாழ் மக்களிடம் தஞ்சம் அடைகிறார். அங்கும் வில்லன் வந்து விட்டதால் எப்படி தனது மக்களை மீட்கிறார் என்பதுதான் படத்தின் இரண்டாம் பாகத்தின் முழுக் கதை. தற்போது இது குறித்து பேசி இருக்கும் ப்ளூசட்டை மாறன் பாசிட்டிவான விமர்சனங்களே வைத்திருக்கிறார். அவர் கூறும் பொழுது படத்தின் முதல் பாகம் போனதே தெரியவில்லை. அவ்வளவு விறுவிறுப்பாக இருந்தது.
படத்தில் வரும் காட்சிகள் நிஜ காட்சிகள் போலவே எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாம் பாகம் நகரவே இல்லை. ஏனென்றால் வில்லனிடம் சண்டை போட்டு எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. அது சுத்தமாக நகர வில்லை. அதற்கு முக்கிய காரணம் வில்லன் கதாபாத்திரத்திற்கு குறைந்த முக்கியத்துவமே கொடுக்கப்பட்டிருந்தது. அவர் அடிக்கடி திரையில் வரவே இல்லை. அவர் கிணறு தூர் வாருபவன் போல எப்போது ஒருநாள் வந்துவிட்டு போகிறார். படம் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காக இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய லேக் என்றே சொல்ல வேண்டும். ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்தை சென்று பார்த்தால் கண்டிப்பாக கண்களுக்கு காட்சி தரும் விருந்தாக இந்த படம் அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று அவர் பாசிட்டிவ்வான விமர்சனங்களை முன்வைத்தார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Tamil Talkies