Categories: சினிமா

அசுரன் கதையை காபி அடிச்சு அவதார்ன்னு எடுத்து வச்சி இருக்கானுங்க ப்ரோ.! கழுவி ஊற்றிய பொதுமக்கள்.!

வெளியிட்டது

3d அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகி பலரின் உள்ளங்களை கவர்ந்த ஒரு திரைப்படம் என்று சொன்னால் அது அவதார் தான். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள் பலரும் அந்த படம் குறித்த விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியாகி இருந்தது. உலக அளவில் பல மொழிகளில் வெளியாக இருந்த இந்த படம், வசூலிலும் சாதனையை குவித்திருந்தது. மேலும் மூன்று பிரிவுகளில் ஆஸ்கார் விருதையும் தட்டிச் சென்றிருந்தது. அவதார் திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, விசுவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கார் விருதை பெற்றிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அசுரன் கதையை காபி அடிச்சு அவதார்ன்னு எடுத்து வச்சி இருக்கானுங்க ப்ரோ.! கழுவி ஊற்றிய பொதுமக்கள்.! 1

இந்தப் படத்தில் முதல் பாகத்தை 25 கோடி அமெரிக்க டாலர்கள் செலவு செய்து இயக்கியிருந்தனர். இந்தப் படம் 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்து இருந்தது. வேறு எந்த திரைப்படமும் இன்றுவரை இந்த வசூலை நெருங்க முடியாத அளவிற்கு வசூலில் முதலிடத்தில் வகித்து வருகிறது. இந்த நிலையில் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது ய. உலகம் முழுவதிலும் 3டி தொழில்நுட்பத்தில் 160 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. தி வே ஆஃப் வாட்டர் என்று இந்த படத்திற்கு தலைப்பிடப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.


இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பலரும் படம் நன்றாக இல்லை. இந்த படத்தை பார்த்துவிட்டு நாங்கள் தூங்கி விட்டோம். படம் மிகவும் மொக்கையாக இருக்கிறது என்ற கருத்தையே கூறி வருகின்றனர். சிலர் இந்த படத்தின் கிளைமாக்ஸ் பார்த்தால் டைட்டானிக் படத்தின் கிளைமாக்ஸ் பார்த்தது போல் இருக்கிறது. மேலும் அசுரன் பட கதையை சுட்டு அவதார் என்று எடுத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் முதல் பையன் இறந்து விடுவான் இதிலும் அதன் போல் இதிலும் முதல் பையன் இறந்து விடுகிறான். எனவே இது அவதார் இல்லை அசுரன் பாகம் 2 என்று கலாய்த்தூம் வருகின்றனர். நீங்களும் மக்கள் கொடுத்த விமர்சனத்தைக் காண..! கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..! Watch the below video.!

 

Youtube Video Code Embed Credits: Cinema Vikatan

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்