Categories: சினிமா

அயலான் படம் ரிலீஸ் ஆகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.! எப்போன்னு தெரியுமா?

வெளியிட்டது

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது அயலான் திரைப்படமும் வெளியாகும் தேதியை அதன் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கைவசம் அயலான், மாவீரன் மற்றும் தனது 24 வது படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் மாவீரன் திரைப்படம் மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அதிதி சங்கர், நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வட சென்னை நாயகனாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தில் மேக்கிங் வீடியோ, டீசர், பாடல்கள் என அனைத்தும் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அந்தாண்ட வங்கக்கரை என்கிற பாடல் பலருக்கும் பிடித்துப்போன பாடலாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்சன் பிளாக்பஸ்டர் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

அயலான் படம் ரிலீஸ் ஆகும் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு.! எப்போன்னு தெரியுமா? 1
இந்த நிலையில் அயலான் என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஏலியன் கதையம்சம் கொண்ட இந்த படம் நகைச்சுவை காமெடி ஜானரில் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை ஆர்டி ராஜாவும் கொட்டப்பாடி ஜே ராஜூஷும் தயாரித்திருக்கின்றனர். ஆர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சரத் கேல்கர், இஷா கோபிகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். படத்தொகுப்பை ரூபன் மேற்கொண்டு இருக்கிறார். இதில் விவசாயியாகவும் வேற்று கிரக வாசியாகவும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினரே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.


கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய கதையாக இந்த படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி இந்த படத்தை நாங்கள் படமாக்கி இருக்கிறோம். அயலான் திரைப்படத்தில் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள் மிகுந்த மெனக்கிடலுடன் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பணி புரிந்திருக்கிறோம். இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி இருப்பதாக கூறியிருந்தார். நாலாயிரத்திற்கும் 500க்கும் மேற்பட்ட வி எஃப் எக்ஸ் காட்சிகளை கொண்டு இந்தியா சினிமாவில் முழு நீள லைவ் ஆக்சன் திரைப்படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. அயலான் திரைப்படம் மூலமாக கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த உலகத்திற்கு செல்ல தயாராக இருங்கள் என்று தயாரிப்பாளர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரை ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்..!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்