Biggbossல் இருந்து வெளியேறி 2 வாரங்களுக்கு பின்னர் முதல் முறையாக லைவ் வந்த மக்கள் நாயகன் அசீம்.!

வெளியிட்டது

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் முதல் முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார் அசீம். பிக்பாஸ் சீசனில் வெற்றியாளராக இருக்கும் அசீம் சீசன் முடிந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு முதன்முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார். இந்த வீடியோவில் அவர் பிக்பாஸ் பற்றியும் தனக்கு கிடைக்கும் வரவேற்பு பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்கிற நாடகத்தின் மூலமாக சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் அசீம். இவர் அதற்கு முன்பாக சில செய்தி தொலைக்காட்சிகளில் சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே, சின்னத்திரை பக்கம் தலை காட்டத் தொடங்கினார். ஆரம்பத்தில துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு, பகல் நிலவு என்னும் சீரியலின் மூலமாக ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுடன் இணைந்து நடித்தார். இந்த சீரியலுக்கு பின்னர் இவர்கள் இருவருக்குமே ரசிகர் பட்டாளம் பெருகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Biggbossல் இருந்து வெளியேறி 2 வாரங்களுக்கு பின்னர் முதல் முறையாக லைவ் வந்த மக்கள் நாயகன் அசீம்.! 1

அதன் பின்னர் அசீம் கடைக்குட்டி சிங்கம் என்கிற நாடகத்தில் நடித்தார்் இந்த நாடகம் சில காரணங்களால் விரைந்து முடிக்கப்பட்டதால், பின்னர் விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்றார். அங்கும் சில நாடகங்களில் நடித்து வந்த அவர், பின்னாளில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த சீரியலுக்கு பின்னர் அவர் எந்த நாடகத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 4ல் ஷிவானி நாராயணன் இருந்தபோதே இவரும் வைல்ட் கார்டு என்டியாக கலந்து கொள்வார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஏனெனில் சிவானியும் அசீமும் காதலித்து வருவதாக வதந்தி அப்போது கிளம்பி இருந்த நிலையில் அவர் பிக் பாஸில் கலந்து கொள்வார் என்ற பரபரப்பு எழுந்தது. ஆனால் அவர் அந்த சீசனில் கலந்து கொள்ளவில்லை. சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்தார் அசீம்.


என்ன சண்டை சச்சரவு இருந்தாலும் அசீமை வெற்றி பெற வைத்திருக்கின்றனர் தமிழக மக்கள். இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் இரண்டு வாரங்களாக எந்த தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளிக்காமல் இருந்து வந்த அவர் தற்போது முதல் முறையாக லைவ் வீடியோவிற்கு வந்திருக்கிறார்.அதில் அவர் பல தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். மணிகண்டனை தான் தனக்கு பிக் பாஸ் வீட்டில் மிகவும் பிடிக்கும், ரட்சிதா தனது உண்மையான முகத்தை காட்டாத ஒருவராக இருந்தார், பிக பாஸ் இன் குரலை தான் மிகவும் மிஸ் செய்கிறேன், பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி பாம்பு போல் கொத்துவார், ஷிவின் கழுகு போல இருப்பார், சிங்கமாக இருந்தது அசீம் மட்டுமே என்று அவர் தன்னைத்தானே பெருமையாக பேசிக் கொண்டார். பிக்பாஸ் வீட்டில் போட்ட சண்டைகளை வைத்து மட்டுமே ஒருவரை முடிவு செய்துவிட முடியாது, அது விளையாட்டிற்காக போடப்பட்ட சண்டை அதை மட்டுமே வைத்து யோசிக்காமல் தமக்கு வாக்களித்து, இவன் கோபப்பட்டாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று சொல்லி தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று பேசியிருக்கிறார். மேலும் விக்ரமன் பற்றியும் அவர் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்