நீங்க மக்கள் நாயகனா? பொண்ணுங்கள வாடி போடின்னு பேசுவீங்களா? ஐயப்பனிடம் மாட்டிய அசீம்.!

வெளியிட்டது

பிக்பாஸ் டைட்டில் வின்னராக இருக்கும் அசீம் தற்போது பிரபல பத்திரிக்கையாளராக இருக்கும் ஐயப்பன் ராமசாமியிடம் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 105 நாட்கள் நிறைவடைந்து சமீபத்தில் தான் முடிந்தது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக நடிகர் அசீம் அறிவிக்கப்பட்டார். அசீம் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல நாடகங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பின்னால் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு சென்ற அவர் அங்கு சில நாடகங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்கிற சீரியலில் ஹீரோவாக நடித்த பிரபலமானார் அசீம். இதற்கு பின்னால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டானது. குறிப்பாக இல்லத்தரசிகள் அசீமுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்க மக்கள் நாயகனா? பொண்ணுங்கள வாடி போடின்னு பேசுவீங்களா? ஐயப்பனிடம் மாட்டிய அசீம்.! 1

இந்த நிலையில் சீசன் சிக்ஸ் இன் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து இணையத்தில் கடுமையான சர்ச்சை உருவானது. அசீம் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளர்களை ஒருமையில் பேசியதும், மரியாதை குறைவாக நடத்தியதும் பலருக்கும் பிடிக்கவில்லை. இருந்தபோதும் 69 சதவீதம் வாக்குகள் பெற்று தான் வெற்றி பெற்றதாக தற்போது பேட்டியில் கூறி இருக்கிறார் அசீம் தற்போது ஐயப்பன் ராமசாமி இடம் பேட்டி அளித்த அவர் தான் எந்த இடத்திலும் மரியாதை குறைவாக நடந்து கொள்ளவில்லை, முந்தைய சீசன்களில் பங்கெடுத்த போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் போது கெட்ட வார்த்தை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார்கள், ஆனால் நான் அது போல் எந்தவிதமான கெட்ட வார்த்தை பயன்படுத்தாமல் நேர்மையாக விளையாடி இருக்கிறேன். விக்ரமம் சொல்லும் அறம் இந்த இடத்திற்கு பொருந்தாது, இது பிக்பாஸ் நிகழ்ச்சி எனவே இங்கு அறத்திற்கு எந்த சம்பந்தமில்லை என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார் அசீம்.

 

அப்போது குறுக்கிட்ட அய்யப்பன் ராமசாமி வாக்கு ஒன்றை மட்டுமே வைத்து நீங்கள் உங்கள் வெற்றியை முடிவெடுக்க முடியுமா? ஒரு எடுத்துக்காட்டிற்கு ஒரு புத்தக கடைக்கு செல்கிறோம், அங்கு திருக்குறள் புத்தகம் இருக்கிறது, வேறு மாதிரியான புத்தகமும் இருக்கிறது. அந்த வேறு மாதிரியான புத்தகங்கள் தான் அதிக அளவில் விற்பனை ஆகிறது எனவே அந்த புத்தகங்கள் தான் திருக்குறளை காட்டிலும் சிறந்த புத்தகங்கள் என்று கூற முடியுமா?/ அது போல் தான் நீங்கள் கூறுவது இருக்கிறது. என்று கேள்விகளால் மடக்கினார். அந்த கேள்விகளுக்கு பதில் சொல் முடியாமல் ஆங்காங்கே அசீம் திணறி வந்தார்..! அந்த முழு வீடியோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

Facebook Video Embed Code Credits: Trendglitz

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்