இவனுங்க எல்லாம் இந்த சீசன் வந்து இருந்தா காணாம போயிருப்பானுங்க.! மட்டம் தட்டும் அசீம்.!

வெளியிட்டது

பிக்பாஸில் முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்து அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்து அசீம் இவ்வாறு பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இதை கமலும் பிக்பாஸ்ஸும் கண்டுக்காமல் இருப்பது முந்தைய சீசன்களில் கலந்து கொண்டவர்களின் ரசிகர்களுக்கு வேதனையை கொடுத்துள்ளது. ஆரம்பம் முதலே அசீம் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்தால் சக போட்டியாளர்கள் பலரையும் ஒருமையில் பேசியும் சண்டை போட்டும் வருகிறார். ஆரம்ப முதலே பெண் போட்டியாளர்களை வாடி போடி என்றும் விக்ரமன் மற்றும் அமுதவாணனை வாடா போடா என்றும் தொடர்ந்து பேசி சர்ச்சையில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு கமலும் பல இடங்களில் கண்டனங்களையும் தெரிவித்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவனுங்க எல்லாம் இந்த சீசன் வந்து இருந்தா காணாம போயிருப்பானுங்க.! மட்டம் தட்டும் அசீம்.! 1

இந்த நிலையில் அவர் ஒரு படி மேலே போய் முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்து தற்போது பேசியிருக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. சீசன் நான்கில் கலந்து கொண்ட ஆஜித், கேப்ரியல்லா, ஷிவானி, ரியோ போன்றவர்கள் எதுவுமே செய்யவில்லை. கன்டென்ட்டே கொடுக்கவில்லை, குறிப்பாக அறந்தாங்கி நிஷா எல்லாம் எதற்காக இந்த வீட்டிற்கு வந்தார்கள் என்பது கூட தெரியவில்லை என்று மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார் அசீம். இந்த காணொளி இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அடுத்தபடியாக சீசன் 3ல் கலந்து கொண்ட முகேன், தர்ஷன் பற்றி எல்லாம் அவர் பேசியிருக்கும் மற்றொரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. தனலட்சுமி மற்றும் அசீம் இருவரும் இரவு நேரம் அமர்ந்து முந்தைய சீசன்களில் விளையாடிய போட்டியாளர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது சீசன் 3யில் கலந்து கொண்ட தர்ஷன் மற்றும் முகேன் இவர்களெல்லாம் இந்த சீசனில் வந்திருந்தால் அடையாளமே தெரிந்திருக்காது. இவர்கள் எல்லாம் இந்த சீசனில் கலந்து கொண்டிருந்தால் முதல் ஆளாக வெளியே சென்று இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார். ரித்திகா, ஆரவ் முகேன் போன்றவர்கள் எல்லாம் பிக் பாஸிற்கு வரவில்லை என்றால் டேய் யாருடா நீங்கள் எல்லாம் என்று கேட்கும் அளவிற்கு இவர்கள் அடையாளமே தெரியாமல் போய் இருப்பார்கள் என்றும் பேசி இருக்கிறார். இந்த காணொளி தற்போது சர்ச்சையாகி வருகிறது. தொடர்ந்து முந்தைய சீசன்களில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பற்றி மட்டம் தட்டும் விதமாக அசீம் பேசி வருவதாகவும் அவரை கண்டிக்க வேண்டும் என்றும் அந்த போட்டியாளர்களின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்