உங்க PR டீம் எத்தனை Mail ID உருவாக்கி உனக்கு ஓட்டு போட்டாங்க? அசீமை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட வெற்றி பெற்ற போட்டியாளரான அசீம் தற்போது தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்றுக்கு இணையவாசிகள் கமெண்ட்டில் கழுவி கழுவி ஊற்றி இருக்கும் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 தொடங்கிய போதே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நபர் அசீம். அந்த சீசனில் அவரது காதலி என கூறப்பட்ட நடிகை ஷிவானி நாராயணன் இருந்ததால் அசீம் உள்ளே அனுப்பபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அந்த சீசனில் பங்கேற்கவில்லை. பின்னர் சீசன் 6ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீசனின் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். கலந்துகொண்ட முதல் வாரத்தில் இருந்து அசீம் சண்டை சச்சரவு என்று ரகளையுடன் இருந்து வந்தார். முதல் வாரத்தில் ரேங்கிங் டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆயிஷாவை அசீம் வாடி போடி என பேசத் தொடங்கினார். அசீமை செருப்பை கழட்டி அடிக்கும் அளவிற்கு சென்றிருந்தார் ஆயிஷா. அந்த அளவிற்கு மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக பேச தொடங்கினார் அசீம்.

உங்க PR டீம் எத்தனை Mail ID உருவாக்கி உனக்கு ஓட்டு போட்டாங்க? அசீமை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 1
அதன் பின்னர் அமுதவாணனிடம் சென்று நீ விஜய் டிவி ஆள் என்றால் பெரிய இவனா? ஜோடி டைட்டில் வென்றால் நீ பெரிய ஆளா? அதெல்லாம் வெளியே போய் வைத்துக்கொள் என்று வாடா போடா என்று பேசினார். மற்றொரு சண்டையில் உனக்கு நெஞ்சு உரப்பு இருந்தால் என்னை அடிடா என்றும் கடுமையாக பேசியிருந்தார் அசீம். இன்னொரு சண்டையில் விக்ரமனிடம் நான் நீ சாப்பிடும் சோற்றில் எச்சித் துப்பி தருகிறேன். தின்பாயா என்றும் பேசியிருந்தார். அதன் பின்னர் ஷிவின் பற்றி பேசும் பொழுது அவருக்கு மொட்டை அடித்து சேவ் செய்துவிட வேண்டும் என்றும், அவர் குளிக்கச் சென்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும் எல்லாம் ஒட்டி வருவதற்கு வெகு நேரம் எடுத்துக் கொள்வார் என்றும் கிண்டலாக பேசினார். மற்றொரு சண்டையில் ஷிவினைப் போலவே குரலையும் செய்கையும் செய்து காட்டி மிகவும் அவமானப்படுத்தினார். இதுபோல தொடர்ந்து சர்ச்சைகளில் ஈடுபட்டு வந்தார் அசீம். இதனால் அவர் டைட்டில் ஜெயிக்க கூடாது என்று வீட்டில் உள்ள மற்ற சக போட்டியாளர்களே கூறிவந்த நிலையில் எதிர்பாராத விதமாக அசீமிற்கு டைட்டில் கிடைத்தது.


தற்போது இன்ஸ்டாகிராமில் டைட்டில் வென்ற சந்தோஷத்தில் அந்த கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் அசீம். அந்த புகைப்படத்திற்கு கீழே கமெண்ட் செய்யும் ரசிகர்கள் இந்த கோப்பைக்கு நீங்கள் தகுதியானவர் இல்லை, உங்களால் அந்த கோப்பைக்குத் தான் அசிங்கம். பிக்பாஸ் மீது இருந்த மரியாதையே போய்விட்டது. உங்கள் மகன் உங்களுடன் வளராமல் இருப்பதே நல்லது. உங்கள் PR டீம் எத்தனை மெயில் ஐடி உருவாக்கி உங்களுக்கு வாக்களித்தார்கள் என்பதை google இடம்தான் கேட்க வேண்டும் என்று பல கமெண்ட்களை போட்டு வருகின்றனர். பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக வெற்றி பெற்ற ஒருவருக்கு இவ்வளவு நெகட்டிவ் கமெண்ட் வருவது அசீமுக்கு தான். தனது PR Team மூலமாக காசு கொடுத்துதான் ஆசீம் ஜெயித்தார் என்கிற விமர்சனங்களையும் இணைய நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்