பாக்கியலட்சுமி சீரியலில் காலனியில் செயலாளர் தேர்தலுக்காக பாக்கியா போட்டியிடும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கோபி, ராதிகாவை தேர்தலில் நிற்க வைத்திருக்கிறார். அதுவும் பாக்யாவை எதிர்த்து நிற்க வைத்து இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் வைதேகி நகர் காலனியில், காலனியின் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாக்கியா போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட ராதிகா முடிவெடுத்திருக்கிறார். மேலும் பாக்யாவை படிக்காதவர் என்ற ரீதியில் ராதிகா தாக்கி பேசுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் கோபி. தற்போது இனியா மற்றும் ராமமூர்த்தியும் கோபியுடனே வந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் வைதேகி நகர் பகுதி காலனியில் அடிக்கடி மின்விளக்குகள் எரிவதில்லை, நாய்கள் தொந்தரவு என்று தொடர்ந்து இருந்து வருகிறது. இதை தற்போது செயலாளராக இருப்பவரிடம் கேட்டால் அவர் பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கிறார். இதனால் அந்த பொறுப்புக்கு மீண்டும் தேர்தல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதில் பாக்யா போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதமாக பாக்யாவை எதிர்த்துப் போட்டியிட ராதிகாவை அழைத்து வருகிறார் கோபி.
ராதிகாவும் தேர்தலில் போட்டியிட சம்மதித்து காலனியில் குடியிருப்பவர்களிடம் மைக்கில் பேசுகிறார். அப்போது அவர் சமைத்து விட்டு, வீட்டு வேலையை பார்ப்பவர்களை விட நன்றாக படித்த எனக்கு ஒரு முறை வாய்ப்பளியுங்கள் என்று சொல்லி வாக்குகள் கேட்கிறார். இதனால் பாக்கிய செம்ம கடுப்பில் இருக்கிறார் நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television