பாக்கியாவுக்கு பின்னால் திரண்ட ஒட்டுமொத்த பெண்கள்.! கூட்டத்தை பார்த்து பீதியில் கோபி

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் காலனி தேர்தலில் நிற்கும் பாக்யாவிற்கு ஒட்டுமொத்த பெண்களும் ஆதரவு அளிப்பதை கண்டு கோபி மிரண்டு போய் அமர்ந்திருக்கிறார். வைதேகி நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார்கள் கோபி மற்றும் பாக்யா. கோபி தனது முதல் மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு அவருக்கு எதிர்த்த வீட்டிலேயே தனது இரண்டாவது மனைவியுடன் குடியிருந்து வருகிறார். தற்போது பாக்யாவின் கடைசி மகள் இனியா மற்றும் கோபியின் அப்பாவும் பாக்யாவை விட்டு பிரிந்து கோபியின் வீட்டில் வசித்து வருகின்றனர். தொடர்ந்து ஏதாவது குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகள் அவர்கள் வீட்டில் நடந்து கொண்டே தான் வருகிறது. தற்போது கதையில் அடுத்த திருப்பமாக அவர்கள் வசிக்கும் காலனி பகுதியில் செயலாளருக்கான தேர்வு தேர்தல் நடைபெற இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பாக்கியாவுக்கு பின்னால் திரண்ட ஒட்டுமொத்த பெண்கள்.! கூட்டத்தை பார்த்து பீதியில் கோபி 1
காலனியில் செயலாளராக இருப்பவர் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை, தெரு விளக்குகள் எரிவதில்லை, அவ்வபோது மக்களை தெரு நாய்கள் கடித்து விடுகிறது. இதை பலமுறை அவரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் நடைபெற இருக்கும் காலனியின் செயலாளர் தேர்வில் பாக்கியலட்சுமி போட்டியிட முடிவு எடுத்து இருக்கிறார். ஆனால் அங்கு ஒரு திருப்பமாக கோபி தனது இரண்டாவது மனைவி ராதிகாவை அவருக்கு எதிராக நிற்க வைத்து இருக்கிறார். ராதிகாவும் மக்களிடம் ஓட்டு கேட்கும் பொழுது வீட்டில் துணி துவைத்து கொண்டு சமைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இதெல்லாம் பற்றி தெரியாது, எனவே படித்த எனக்கு வாக்களியுங்கள் என்று பாக்யாவை குத்திக் காட்டும் விதமாக பேசினார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்யாவிற்கு காலனியில் இருக்கும் ஒட்டுமொத்த பெண்களின் ஆதரவு கிடைத்துள்ளது. பாக்யா தான் வெற்றி பெற வேண்டும், நாங்கள் பாக்யாவிற்கு தான் ஓட்டு போடுவோம் என்று அனைவரும் ஒன்று சேரக் கூறுவதால் கோபி அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!

 

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்