பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.! இனியா நிலை என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியா சென்ற பள்ளி வாகனம் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் பள்ளியில் இருந்து அழைப்பு வரவே பதறி அடித்துக்கொண்டு ஓடும் பாக்கியலட்சுமி இனியாவை பார்க்க முடியாமல் கதறி அழுகிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு விறுவிறுப்பான தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்தத் தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. குறிப்பாக இந்த தொடரின் கதாநாயகி பாக்கியலட்சுமியின் கணவருக்கு இரண்டு மனைவிகள். தற்போது மூத்த மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது மனைவி ராதிகாவுடன் கோபி குடும்பம் நடத்தி வருகிறார். கோபியின் மூத்த மனைவியின் மகளான இனியாவும் தற்போது கோபியுடன் வந்துவிட்டார்.

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.! இனியா நிலை என்ன? பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி.! 1

ஆனால் இனியாவுக்கு இரண்டாவது மனைவி ராதிகாவை சுத்தமாக பிடிக்கவில்லை. அவருடன் பேசுவதில்லை. ராதிகா சமைக்கும் சாப்பாடுகளும் கூட அவருக்கு பிடிப்பதில்லை. இதனால் இனியாவுக்கும் ராதிகாவிற்கும் எப்போது பார்த்தாலும் சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் இனியா பள்ளியிலிருந்து டூருக்கு செல்கிறார்கள். அந்த வாகனம் தற்போது விபத்துக்குள்ளாகி இருக்கிறது. ராதிகாவுடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் கோபி. அப்போது பள்ளியில் இருந்து அழைப்பு வரவே பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தபோது இனியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே அவரை தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

அதே சமயம் பள்ளியில் இருந்து பாக்கியாவுக்கும் அழைப்பு செல்கிறது. பாக்யாவும் எழிலும் பள்ளிக்கு விரைகின்றனர். ஆனால் பாக்கியாவை பார்த்த கோபி இனியாவை அவரது கண்ணில் படாமல் தனியாக அழைத்து செல்கிறார். பின் தொடர்ந்து செல்லும் பாக்யா என் பிள்ளையை நான் பார்க்க வேண்டும் என்று கதறிஅழுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video.!

YouTube Video Code Embed Credits: Vijay television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்