ராதிகா சமைத்த உணவை சாப்பிட்டு வாந்தி எடுத்த கோபி.! செம்ம கூத்தா இருக்கே இந்த ப்ரோமோ.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருக்கிறது. இது கடந்த சில மாதங்களாகவே டி ஆர் பி ரேட்டிங்கிலும் முதலிடம் வகிக்கிறது. எதார்த்தமான ஒரு குடும்பத் தலைவி தன் கணவன் மற்றும் குடும்பத்துடன் எப்படி அனுசரித்துப் போகிறார் என்பது குறித்த கதை தான் பாக்கியலட்சுமி. நம் வீட்டில் இருக்கும் அம்மாக்களைப் போலவே பாக்கியலட்சுமி கதாபாத்திரம் இருந்ததால் இந்த தொடரை பலரும் விரும்பிப் பார்க்க தொடங்கினர். பாக்கியலட்சுமியின் கணவர் தனது கல்லூரி கால காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக முதல் மனைவி பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக காதலி ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

ராதிகா சமைத்த உணவை சாப்பிட்டு வாந்தி எடுத்த கோபி.! செம்ம கூத்தா இருக்கே இந்த ப்ரோமோ.! 1

கோபி மற்றும் ராதிகாவின் கள்ளக்காதல் பாக்யாவுக்கு தெரிந்த நாள் முதல் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பின்னர் பாக்கியலட்சுமியை வெறுப்பேற்றும் விதமாக, அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் குடி வந்துள்ளார் கோபி. இதனால் பாக்கியா இன்னும் கோபமடைகிறார். இந்த நிலையில் நேற்று வெளியான எபிசோடில் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் தனக்கு, ஒரு காபி கிடைக்குமா என்று கேட்கிறார் கோபி. ஆனால் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுமாறு ராதிகா அறிவுறுத்துகிறார். மேலும் தனக்கு மிகவும் பசிப்பதாக கோபி கூற, பத்து நிமிடங்களில் சமைத்து வருகிறேன் என்று கூறிவிட்டு ராதிகா சமையலறைக்கு செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து பிரியாணி வாசம் வருவதாக கோபி மயூவிடம் கூற, மயூ என் அம்மா சமைத்தால் பிரியாணி வாசம் வராது, வேறு எங்கிருந்தோ அந்த வாசம் வருகிறது, அம்மா வேறு ஏதோ சமைக்கிறார் என்று கூறுகிறார். பின்னர் சாப்பிட உள்ளே சென்ற கோபிக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஓட்ஸ் கஞ்சியை உணவாக தருகிறார் ராதிகா. அதை சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்துக்கொண்டு உள்ளே தள்ளுகிறார் கோபி. இந்த காமெடியான ப்ரோமோவை பார்த்த பலரும், கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த உனக்கு நன்றாக வேண்டும் என்று வழக்கம்போல் கோபியை திட்டி தீர்த்து வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்