Categories: சினிமா

இன்டெர்வியூக்கு சென்ற பாக்கியா..பயங்கரமாக அசிங்கப்படுத்திய சக போட்டியாளர்கள்..இன்றைய முழு எபிசோட் விவரம்

வெளியிட்டது

இல்லத்தரசிகளுக்கு மிகவும் மனம் கவர்ந்த நாடகமாக இருக்கிறது பாக்கியலட்சுமி. இதில் நேற்றைய எபிசோடில் பாக்கியலட்சுமியின் மகள் இனியா, தனது தந்தை கோபியுடன் சென்று விடுகிறார். செழியனுக்கு போன் செய்யும் கோபி, இனியா தன்னுடன் இருக்கும் தகவலை தெரிவித்து விடுகிறார். செழியனும் தனது பாட்டி ஈஸ்வரிக்கு இனியா கோபியுடன் சென்றதை கூறிகிறார். ஆனால் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் இனியாவை தேடி அலைகிறார் பாக்யா. இனியாவின் பள்ளிக்கெல்லாம் சென்று அலைந்து திரிந்துவிட்டு வீட்டிற்கு வரும் பாக்யா, ஜெனியிடம் போலீசில் புகார் அளிக்கலாம் என்று கூறுகிறார். ஆனால் விஷயம் தெரிந்த ஈஸ்வரி எதுவும் பேசாமல், பாக்கியாவை அலையவிட்டு வேடிக்கை பார்க்கிறார். மேலும் தனது பேத்தி இனியா தொலைந்ததற்கு நீ தான் காரணம் என்று பாக்கியவுடன் சண்டை இடுகிறார்.

இன்டெர்வியூக்கு சென்ற பாக்கியா..பயங்கரமாக அசிங்கப்படுத்திய சக போட்டியாளர்கள்..இன்றைய முழு எபிசோட் விவரம் 1

இதனால் பாக்யா மிகவும் மன வேதனையுடன் இருக்கிறார். அப்போது இனியா கோபியுடன் காரில் வந்து இறங்குகிறார். இதனால் மன நிம்மதி அடைகிறார். இன்றைய எபிசோடில் பாக்யா உணவு சமைப்பதற்கான போட்டியில் பங்கெடுப்பதற்காக செல்கிறார். மிகப்பெரிய திருமணத்திற்கு ஆர்டர் செய்யும் ஒரு கம்பெனியிலிருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. அங்கு சென்று பார்த்தபோது அவர் மட்டும்தான் பெண் போட்டியாளராக வந்திருக்கிறார். மீதி அனைவருமே ஆண் போட்டியாளர்கள். அப்போது அருகில் இருக்கும் ஒருவர் நீங்கள் எது போன்ற விசேஷங்களுக்கு சமைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்க, நான் மசாலா பொடி கம்பெனி வைத்திருக்கிறேன். பிறந்தநாளுக்கு சமைத்துக் கொடுத்திருக்கிறேன் என்று பதில் அளிக்க, அங்கு உள்ள மற்ற அனைவரும் சிரித்து விடுகிறார்கள்.

பின்னர் அதிலிருந்து 15 பேரை மட்டும் தேர்வு செய்து, அடுத்த கட்டத்திற்கு அனுப்ப அந்த நிறுவனம் முடிவு எடுத்துள்ளது. அப்பொழுது பாக்யாவிடம் உங்கள் பயோடேட்டாவை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் பாக்யா பயோடேட்டா என்றால் என்ன என்று பாக்யா கேட்க, மீண்டும் பாக்யா அசிங்கப்படுத்தப்படுகிறார். பின்னர் 15 நிமிடங்களில் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அப்போ எழிலிடம் பேசும் பாக்யா, தனக்கு மிகவும் பயமாக இருப்பதாக கூறுகிறார். ஆனால் எழில் பயப்படாத அம்மா நீ இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் என்று ஊக்கமளிக்கிறார். இத்துடன் இந்த எபிசோடு இன்றைக்கு நிறைவடைகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்