‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கோபி மற்றும் ஈஸ்வரி இருவரும் அமர்ந்து கொண்டு பாக்யாவுக்கு இந்த பொருட்காட்சி காண்ட்ராக்ட் கிடைக்காது, அவர் வெறும் கையோடு தான் திரும்பி வருவார் என்று கிண்டல் அடித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை கேட்கும் ராதிகா கோபத்தில் கோபியை வெளுத்து வாங்குகிறார். அப்போது ராமமூர்த்தி எழுந்து கோபியை பங்கம் செய்து கலாய்க்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ராதிகாவின் இந்த செயல்பாடுகளால் பாக்யா மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் ஒரு அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு நடத்தும் பொருட்காட்சியில் சமையல் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் பாக்யா சமைப்பதற்காக அங்கு சென்று இருக்கிறார். மழை காரணமாக தேதி தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவருக்கு மீண்டும் அங்கு சமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் சமைப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் கோபி மற்றும் ஈஸ்வரி ராமமூர்த்தி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி பாக்கியா போல மிமிக்ரி செய்து கொண்டிருக்கிறார். “இப்போது பாக்யா அழுது கொண்டே வந்து பொருட்காட்சி நடக்கவில்லை என கூறுவார் பாருங்கள்” என்று கோபி கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது ராதிகா அங்கு வரும் ராதிகா, “பாக்யா எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஆர்டரை எடுத்திருக்கிறார்கள், நீங்கள் ஊக்கம் அளிக்கவில்லை என்றால் பரவாயில்லை, இதுபோல கேவலமாக பேசாதீர்கள்” என்று கோபப்படுகிறார் அதை கேட்ட ராமமூர்த்தி ராதிகாவிடம், “நீ அறிவாக இருக்கிறாய், நன்றாக பேசுகிறாய், அப்புறம் எப்படி இவனை திருமணம் செய்து கொண்டாய்” என்று சொல்லி கோபியை பங்கமாக கலாய்த்து விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television