பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா தற்போது காரில் கோபியை அமர வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு தொல்லை செய்கிறார். உங்களை நான் கல்யாணம் செய்து கொள்ள சொன்னேனா? எதற்காக என்னை கல்யாணம் செய்து கொண்டு இப்படி செய்கிறீர்கள் என்று கோபியிடம் கேள்வி மேல் கேட்கிறார் ராதிகா. ஆனால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கோபி திணறிக் கொண்டிருக்கிறார். பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகன் கோபி இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நாள் தொடங்கி, ஏதாவது ஒரு பிரச்சனை கிளம்பிக் கொண்டே இருக்கிறது. மன நிம்மதியை இழந்து கோபி அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்குகிறார். மேலும் குடித்து விட்டு இரண்டாவது மனைவி ராதிகாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே குடிகாரர் என்பதால்தான் ராதிகா முதல் கணவரை விவாகரத்து செய்திருப்பார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கோபியும் குடிக்கு அடிமையாகி இருக்கிறார். இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைய ராதிகா தன் வீட்டிலிருந்து வெளியே செல்கிறேன் என்று சொல்லி தனது மகளுடன் மூட்டை முடித்து எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். அப்போது நடுரோட்டில் வைத்து கோபி ராதிகாவிடம் மன்றாடி அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இந்த பிரச்சனை தெருவில் உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. குறிப்பாக எதிர் வீட்டில் வசித்து வரும் கோபியின் முதல் மனைவியான பாக்யாவிற்கும் கோபியின் பெற்றோர்களுக்கும் இந்த விஷயம் தெரிய வருகிறது. இதனால் மனமுடைந்து போன கோபியின் தாயார் ஈஸ்வரி கோபியை எப்படியாவது மீண்டும் தங்கள் வீட்டிற்கு திரும்பி வர வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்காக கோபியை நேரில் அழைத்து அவர் பேச முயற்சி செய்கிறார்.
கோவிலில் வைத்து கோபியிடம் பேசும் ஈஸ்வரி, மீண்டும் வீட்டிற்க்கே திரும்பி வந்து விடும்படி பேசிக் கொண்டிருக்கிறார். இதை திரை மறைவில் இருந்து கேட்ட ராதிகா தற்போது கோபம் கொள்கிறார். இது பற்றி கோபியிடம் ராதிகா கேள்வி மேல் கேள்வி கேட்டு தொல்லை செய்கிறார். உங்கள் தாயார் வீட்டிற்கு திரும்பி வந்து விடும்படி கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் பதில் எதுவும் சொல்லாமல் இருக்கிறீர்கள், உங்களுக்கு அங்கு செல்ல விருப்பமா என்றும், உங்களால் நான் தான் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் என்றும் கோபியிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். இதனால் பதில் சொல்ல முடியாத கோபி மனம் உடைந்து போய் அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television