விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது பாக்யா மீதான காதல் பழனிச்சாமிக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது பாக்யாவை சந்திக்கும் பழனிச்சாமி, அவரது நினைப்பிலேயே காரை ஓட்டிக்கொண்டு ட்ராபிக் சிக்னலில் கூட நிற்காமல் கடந்து செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பழனிச்சாமியின் பிறந்த நாளுக்காக பாக்யா பார்த்து பார்த்து உணவுகளை சமைத்து ஏற்பாடு செய்து பார்ட்டியை வெகு சிறப்பாக நடத்துகிறார். விருந்துக்கு வந்த அனைவரும் பாக்யாவின் உணவை சாப்பிட்டு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், பழனிச்சாமிக்கு பாக்கியா மீது காதல் வருகிறது. இந்த நிலையில் பாக்யாவிற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தி விட்டீர்களா என பழனிச்சாமி தனது தாயாரிடம் கேட்கிறார். அப்போது அவர் பாக்யா அந்த பணத்தை வாங்க மாட்டேன் என மறுத்துவிட்டதாக கூறுகிறார்.
இதனால் தானே பணத்தை எடுத்துக் கொண்டு பழனிச்சாமி பாக்யாவின் கடைக்கு செல்கிறார். அங்கு ‘அன்பிற்கு விலை பேசாதீர்கள்’ என்று பாக்கியா பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார். இதனால் பழனிச்சாமிக்கு பாக்யா மீது மேலும் காதல் அதிகரிக்கிறது. அவர் சிக்னலில் கூட காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிக் கொண்டு வருகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television