இனிமே நானும் இங்க தான் இருப்பேன்.! பெட்டி படுக்கையுடன் பாக்யா வீட்டிற்கு கிளம்பி வந்த ராதிகா.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு பாக்யாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். நீங்கள் இனிமேல் பாக்யாவின் வீட்டில் வசித்தால் உங்கள் மனைவியாகிய நானும் இதே வீட்டில் தான் இருப்பேன் என்று ராதிகா கோபமாக கூறுகிறார். இதனால் தற்போது பரபரப்பு எழுந்திருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா அடுத்தடுத்த தொல்லைகளை தொடர்ந்து கோபிக்கு கொடுத்து வருகிறார். முதல் மனைவியுடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த கோபி எதேச்சையாக தனது கல்லூரி காதலியான ராதிகாவை சந்திக்கிறார். ராதிகாவின் முதல் கணவர் குடித்துவிட்டு அவரை துன்புறுத்துவதால் முதல் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார் ராதிகா. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட கோபி, ராதிகாவை காதல் வலையில் விழ வைத்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமே நானும் இங்க தான் இருப்பேன்.! பெட்டி படுக்கையுடன் பாக்யா வீட்டிற்கு கிளம்பி வந்த ராதிகா.! 1
மேலும் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு முதல் மனைவி பாக்யாவின் வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே குடி வந்துவிட்டார். இங்கிருந்து பிரச்சினைகள் தொடங்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து ராதிகாவும் கோபியும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் மன நிம்மதியை இழந்த கோபி அளவுக்கு அதிகமாக குடிக்கத் தொடங்குகிறார். குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்தும் கிடக்கிறார். இதெல்லாம் கோபியின் தாயார் ஈஸ்வரிக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ரோட்டில் தள்ளாடிக் கொண்டிருந்த கோபியை செழியன் பாக்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இனிமேல் கோபி இங்குதான் இருப்பார் என்று சொல்லி ஈஸ்வரி பாட்டி வீட்டில் உள்ள அனைவரிடமும் கோபத்துடன் கத்துகிறார். மேலும் கோபியின் அறைக்கு அழைத்துச் சென்று அவரை அங்கே தூங்கவும் வைக்கிறார். இதற்கிடையில் ராதிகாவின் தாயார் ராதிகாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.


அவர் ராதிகாவிற்கு சில துர்போதனைகளை செய்கிறார். கோபி இனிமேல் அந்த வீட்டில் இருந்தால் அவரது மனைவியான நீயும் அதே வீட்டில் தான் இருக்க வேண்டும் எனவே நீயும் அந்த வீட்டிற்கு கிளம்பி செல் என்று அவர் அறிவுரை கூறுகிறார். அதன்படி இன்று மூட்டை முடிச்சுகளுடன் பாக்யா வீட்டிற்கு வரும் ராதிகா கோபியிடம் கோபமாக பேசுகிறார். உங்கள் வீடு இதுதான், நீங்கள் இனிமேல் இந்த வீட்டில் தான் இருப்பீர்கள் என்றால் உங்கள் மனைவியான நானும் இனிமேல் இதே வீட்டில் தான் இருப்பேன் என்று பெட்டி படுக்கையுடன் உடன் கிளம்பி வந்து விட்டார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்