தூங்க தனியாக அறை இல்லாமல் கஷ்டப்படும் பாக்யா.! பாவம் உக்காந்துட்டே தூங்குறாங்களே

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா கோபியின் வீட்டில் வந்து தங்கி இருப்பதால் பாக்யாவிற்கு படுக்க கூட இடமில்லாமல் நடு ஹாலில் வந்து படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த இனியா பாக்யாவிடம் வந்து கரிசனமாக பேசுகிறார். நீ ரொம்ப நல்ல அம்மா, உன்னை நான் புரிந்து கொள்ளாமல் போய் விட்டேன் என்று பேசுகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவிடும் பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பை அதிகப்படுத்தி கொண்டே இருக்கிறது. தற்போது பல பரபரப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி பாக்யாவுடன் வாழ விருப்பம் இல்லாமல் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் கோபி. ஆனால் ராதிகாவை திருமணம் செய்த நாள் தொடங்கி அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தூங்க தனியாக அறை இல்லாமல் கஷ்டப்படும் பாக்யா.! பாவம் உக்காந்துட்டே தூங்குறாங்களே 1
கோபியால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை. அவர் அளவுக்கு அதிகமாக குடிக்கத் தொடங்குகிறார். குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கிறார். இதனால் பிரச்சனைகளை சமாளிக்க கோபியை மீண்டும் தங்களது வீட்டில் திரும்புமாறு கோபியின் தாயார் ஈஸ்வரி அழைப்பு விடுக்கிறார். மேலும் ஒரு நாள் ரோட்டில் விழுந்து கிடந்த அவரை மீட்டு பாக்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். ஒருநாள் இரவு முழுவதும் கோபி பாக்கியாவின் வீட்டிலேயே தங்கி விடுகிறார். இதை தெரிந்து கொள்ளும் ராதிகா நேராக கிளம்பி பாக்கியாவின் வீட்டிற்கு வந்து விடுகிறார். சட்டரீதியாக நான் தான் மனைவி, இவர் இருக்கும் வீட்டில் தான் நானும் இருப்பேன் என்று சொல்லி சண்டை போடுகிறார். ஆனால் கோபியின் தாயார் ஈஸ்வரியோ நாங்கள் இருக்கும் வரை எங்களுக்கு பாக்யா தான் மருமகள் என்று பேசுகிறார். இதனால் கடுப்பான ராதிகாவின் தாயார் அப்படி நீங்கள் நினைத்தால் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று முறைப்படி தாலி கட்டிக் கொண்ட ராதிகாவை இவர்கள் அனைவரும் வெறுக்கிறார்கள் என்று சொல்லி வழக்கு தொடுப்பேன் என்று கூறுகிறார்.


இதனால் வேறு வழியில்லாமல் ராதிகாவை வீட்டிற்குள் சேர்த்து விட்டனர். தற்போது கோபியின் அறையில் ராதிகாவும் கோபியும் ஒன்றாக இருக்கின்றனர். மேலும் பாக்யாவின் அறையில் இனியா இருப்பதால் பாக்யாவிற்கு அறை கிடைக்காமல் தவித்து வருகிறார். இதனால் வீட்டின் நடு ஹாலில் கீழே பாய் விரித்து அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் இனியா பாக்யாவிடம் பேசுகிறார். அப்பா தப்பு மேல தப்பு செய்கிறார், ஆனால் நீ தண்டனை அனுபவிக்கிறார் என்று பாக்யாவிற்கு ஆறுதலாக பேசுகிறார். இதனால் பாக்யாவும் இனியாவும் உடைந்து போய் அழுகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்