எதே காலேஜ்-க்கு போறியா? யாரை கேட்டு இதெல்லாம் பண்ற? ரவுண்டு கட்டிய ஈஸ்வரி.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா கல்லூரிக்கு செல்லும் விஷயம் அவரது மாமியாரான ஈஸ்வரிக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் பாக்யாவை ஈஸ்வரி கல்லூரிக்கு அனுப்ப மாட்டார் என்று தெரிகிறது. பாக்யலட்சுமி சீரியலின் நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் கதாநாயகியாக இருக்கும் பாக்யா தற்போது பல தொழில்களை நடத்தி தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். ஈஸ்வரி கேட்டரிங் சர்வீஸ், ஈஸ்வரி மசாலா போன்ற நிறுவனங்களை நடத்தி வரும் அவர் ஐடி கம்பெனி ஒன்றிலும் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து அதை சிறப்பாக நடத்தி வருகிறார். இப்படியாக பல இல்லத்தரசிகளுக்கு ஊக்கம் கொடுத்து வரும் இந்த தொடரில் தற்போது அடுத்த கட்டமாக கல்லூரிக்குச் சென்று படிக்கவும் இருக்கிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எதே காலேஜ்-க்கு போறியா? யாரை கேட்டு இதெல்லாம் பண்ற? ரவுண்டு கட்டிய ஈஸ்வரி.! 1

திருமணம் ஆகி தனது மகன்களுக்கே குழந்தை பிறக்கும் நிலையில் தற்போது பாக்யா தானும் கல்லூரிக்கு செல்வேன் என்று சொல்லி கல்லூரியில் இணைந்திருக்கிறார். மகள் இனியா படிக்கும் அதே கல்லூரியில் அவரும் இணைந்து இருக்கிறார். இதனால் இனியா தற்போது பாக்யாவிடம் சரியாக பேசுவதில்லை. பாக்யா கல்லூரியில் வந்து படிப்பதில் இனியாவிற்கு துளியும் விருப்பமில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக காசிக்கு யாத்திரைக்கு சென்று இருந்த ஈஸ்வரி தற்போது திரும்பி வந்திருக்கிறார். அவரின் உடையும் தோற்றமும் முழுதாக மாறி இருக்கிறது. நெற்றியில் பட்டை போட்டுக் கொண்டு சாமியார் போல காட்சி தருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஈஸ்வரியிடம் பாக்யா கல்லூரி செல்லும் விஷயத்தை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று எழில் ஒரு திட்டம் போடுகிறார்.

அதில் பாக்யா ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தது போலவும், அதில் தனது மாமியார் தான் கல்லூரிக்கு சென்றால் அதை எதிர்க்க மாட்டார் என்று பேசுவது போலவும் இருக்கிறது. அதை பார்த்துவிட்டு ஈஸ்வரி பாக்யாவை அழைத்து என்ன இதெல்லாம் என்று கேட்கிறார். அப்போது பாக்யா ஈஸ்வரி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். அதை பார்த்த ஈஸ்வரி அப்போ நீ காலேஜுக்கு சேர்ந்துட்ட அப்படித்தானே? என்று கோபத்துடன் கேட்கிறார். இதனால் ஈஸ்வரி பாக்யாவை கல்லூரிக்கு அனுப்புவாரா இல்லையா என்பது தெரியவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்