பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபியின் தாயார் ஈஸ்வரி கோபியிடம் சில கேள்விகளை கேட்டு அவரை அடித்து துரத்தி விடுகிறார். பாக்யா தான் எங்களுக்கு முக்கியம் பாக்யா தான் எங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரை நாங்கள் என்றுமே விட்டு தர மாட்டோம் என்று சொல்லி கோபியிடம் கோபமாக பேசியிருக்கிறார் ஈஸ்வரி. பின்னர் ஈஸ்வரியை சந்திக்கும் பாக்கியா அவரை கட்டிப்பிடித்து அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியா கல்லூரிக்குச் சென்று படிக்க தொடங்கி இருக்கிறார். வங்கி கடனுக்காக செல்லும் பாக்யாவிற்கு படித்தவர்களுக்கு மட்டுமே கடன் என்று கூறிவிடுகிறார்கள். இதனால் பாக்யா தனக்கும் படித்து பட்டதாரியாக வேண்டும் என்கிற ஆசை வருகிறது. எனவே அவர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது அவரது மாமியாராக இருக்கும் ஈஸ்வரிக்கு தெரியாது. அவர் காசிக்கு சென்று தற்போது தான் திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் தனது மாமியாரிடம் இந்த விஷயத்தை எப்படியாவது கூறி சம்மதம் பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் பாக்யா. இதற்கிடையில் தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கோபி ஈஸ்வரியை சந்தித்து அந்த வீட்டில் என்ன நடக்கிறது? பாக்யா எதற்காக காலேஜுக்கு போகிறாள் என்று கேட்கிறார். அப்போது காலேஜுக்கு போனால் என்ன தப்பு உன்னை மாதிரி திருட்டுத்தனம் எதுவும் செய்யவில்லையே என்று கோபியின் முகத்தில் அடித்தார் போல கேட்கிறார். மேலும் உன்னைப் போல் கிடையாது, பாக்யா எங்களுக்காகவே வாழ்கிறவள், அவள் கல்லூரி சென்று படிக்கட்டும் என்று கோபியின் முகத்தில் அடித்தார் போல கூறி அனுப்பி விடுகிறார்.
இதையெல்லாம் மாடியில் இருந்து பாக்யா கேட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் கீழே இறங்கி வந்த பாக்யா ஈஸ்வரியை கட்டிப்பிடித்து அழத் தொடங்குகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television