நான் ஏன் வெளிய போகணும், இது என் வீடு, நீ வெளிய போயா.! செம்ம ட்விஸ்ட் கொடுத்த பாக்கியா

வெளியிட்டது

விஜய் டிவியில் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி உள்ளது. பாக்கியலட்சுமி சீரியலுக்கு பல ரசிகர்கள் உண்டு. இதில் கதாநாயகியாக வரும் பாக்யா தனது கணவன் கோபியின் கள்ளக்காதலை பற்றி சமீபத்தில் தெரிந்து கொண்டார். கோபியின் கள்ளக்காதலி தன்னுடைய தோழி ராதிகா என்பதை தெரிந்து கொண்ட பின்புதான் அவர் மிகவும் உடைந்து போனார். ஆனால் உண்மையில் ராதிகாவிற்கும் கோபியின் மனைவி பாக்யா தான் என்று தெரியாது. ஆனால் இருவரும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றியதாக கருதி பாக்யா தன் கணவரிடம் மிகக் கடுமையாக சண்டையிடுகிறார். இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் முற்றி போகவே கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று விடுகிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் ஏன் வெளிய போகணும், இது என் வீடு, நீ வெளிய போயா.! செம்ம ட்விஸ்ட் கொடுத்த பாக்கியா 1

விவாகரத்து பெற்றுவிட்டு கோர்ட்டில் இருந்து வீட்டிற்கு வரும் அவரை கோபி வாசலிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறார். எனக்கு வேண்டுமென்றே விவாகரத்து கொடுத்த இவள், இந்த வீட்டிலேயே இருக்கக் கூடாது என்று சண்டையிடுகிறார். மேலும் இனியாவிடம் இவளுக்காக இனி நீ அழக்கூடாது என்றும் சொல்கிறார். இவள் இல்லை என்றால் இந்த வீட்டில் எதுவுமே நடந்து விடாதா? என்று கோபமான வார்த்தைகளில் கேள்வி கேட்கிறார். மேலும் அவர்கள் வீட்டில் சமையல் கார பெண்ணாக இருக்கும் செல்வியை கைகாட்டி இந்த செல்வி மாதிரி இவளும் இந்த வீட்டில் ஒரு சமையல்கார பெண்ணாகத்தான் இத்தனை நாட்கள் இருந்ததாகவும் அவர் கடுமையான வார்த்தைகளை கூறினார். இதனால் பாக்யா மேலும் மனமுடைந்து போகிறார்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பாக்யாவின் உடமைகளை எடுத்து வெளியில் வீசுகிறார் கோபி, ஆனால் அதில் பாக்யாவின் உடைகள் இல்லாமல் கோபியின் உடைகள் இருக்கிறதுழ இதை பார்த்து அதிர்ந்து போன கோபி என் உடைகளை ஏன் எடுத்து வைத்தாய்? என்று கேட்க இது என் வீடு, நீங்கள் வெளியே போங்கள் என்று கோபமாக கூறுகிறார். செம ட்விஸ்டாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the below Video…

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்