பெரிய பெண்ணான மயூ.! சடங்கில் பங்கேற்காமல் எஸ்கேப் ஆக நினைக்கும் கோபி.! மீண்டும் எழுந்த சண்டை.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ராதிகாவின் மகளாக இருக்கும் மயூ பருவம் எய்தியிருக்கிறார். இதனால் கோபிக்கு புது சிக்கல் எழுந்திருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். தற்போது கதைப்படி கோபி தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். கோபியின் பெயரில் இருந்த வீட்டை பாக்யா தன் பெயருக்கு எழுதி மாற்றி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெரிய பெண்ணான மயூ.! சடங்கில் பங்கேற்காமல் எஸ்கேப் ஆக நினைக்கும் கோபி.! மீண்டும் எழுந்த சண்டை.! 1

தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் இனியா தனது தந்தையை அழைத்துக் கொண்டு கேரளாவிற்கு கல்லூரி ப்ராஜெக்ட்டுக்காக டூர் செல்ல இருக்கிறார். இதற்காக தனது தந்தை, பாட்டி, தாத்தா என அனைவரிடமும் அவர் மகிழ்ச்சியில் கூறிக் கொண்டிருக்கிறார். அதே சமயம் இன்னொரு புறம் கேரளாவிற்கு டூர் செல்வது குறித்து ராதிகாவிடம் கோபி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவின் தாயார் அங்கு வந்து மயூ பூப்பெய்தி விட்டதாக கூறுகிறார். மேலும் நாளையும் மயூற்கு சடங்குகள் நடக்க இருப்பதால் கோபியை வேறு எந்த வேலையிலும் கமிட்டாக வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் கோபியோ தன்னால் நாளைக்கு வர முடியாது. இனியா கல்லூரியில் இருந்து தான் ஊருக்கு செல்ல இருக்கும் விஷயத்தை கூறுகிறார். இதைக் கேட்டு கடுப்பான ராதிகா, உங்களுக்கு மயூ முக்கியமா இல்லை? இனியாவுடன் கேரளா டூர் முக்கியமா என்று கேட்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்கிற குழப்பம் எழுந்திருக்கிறது் இனியாவா அல்லது மயூவா என்கிற குழப்பத்தில் தற்போது கோபி இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்