‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் செழியன் தனது மாமனாரை சந்தித்து நடந்தது குறித்து விளக்கம் அளிப்பதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு வரச் சொல்கிறார். ஆனால் அந்த சமயம் பார்த்து அங்கு வரும் மாலினி செழியன் குறித்து தவறு தவறாக ஜெனியின் தந்தையாரிடம் கூறி விட்டு செல்கிறார். இதனால் ஜெனியின் தந்தை “நீ இன்னும் திருந்தவில்லை” என்று செழியனிடம் சண்டை போட்டுவிட்டு செல்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் பாக்யாவின் மூத்த மகனாக இருக்கும் செழியனுக்கும் தொழிலதிபர் மாலினுக்கும் நட்பு ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அது நாளடைவில் காதலாக மாற மாலினி செழியனை வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறார். பின்னர் அந்த வீடியோவை செழியனின் மனைவி ஜெனி பார்த்துவிட அவர் கோபத்தில் செழியினை விட்டு பிரிந்து தனது தாயாரின் வீட்டில் அடைக்கலம் புகுந்து இருக்கிறார். நிலைமை இப்படியாக ஒரு புறம் இருக்க, தற்போது செழியன் தவறை உணர்த்து திருந்தி ஜெனி உடன் வாழ விரும்புகிறார். ஆனால் ஜெனி இன்னும் பிடிவாதமாக இருக்கிறார். பாக்யா சென்று நேரில் பேசி கூட ஜெனி வர மறுத்துவிட்டார். இந்த நிலையில் ஜெனியின் தந்தை தற்போது செழியனிடம் பேசி சமாதானம் செய்வதற்காக ஹோட்டலுக்கு வந்து வந்தார். அப்போது மாலினி அங்கு வந்து ஜெனியின் தந்தையிடம் செழியன் பற்றி தவறாக போட்டுக் கொடுக்கிறார்.
இதை பார்த்த ஜெனியின் தந்தை செழியன் இன்னும் திருந்தவில்லை என்று சொல்லி அவரிடம் சண்டை போட்டுவிட்டு செல்கிறார். மேலும் வீட்டிற்கு வரும் செழியன் தனது தாயாரை கட்டிப்பிடித்து நடந்ததை கூறி அழுது கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television