எனக்கு நீதான் வேணும்.! வீட்டை விட்டு எழிலுடன் ஓடி வந்த அமிர்தா.! அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் தற்போது தனது காதலியான அம்ருதாவை தேடி கண்டுபிடித்து விட்டார். மேலும் பாக்யா அம்ரிதாவிடம் போனில் தைரியமாக இரு அம்ரிதா இனிமேல் எல்லாமே நல்லதாக நடக்கும் என்று பேசுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடர்களில் ஒன்றாக இருப்பது பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இவரின் எதார்த்தமான நடிப்பால் இல்லத்தரசிகளின் பலரின் மனங்களை கொள்ளையடித்து இருக்கிறார். மேலும் கணவர் தனக்கு துரோகம் செய்துவிட்டு தன்னை விவாகரத்து செய்த போதிலும் துணிச்சலான பெண்ணாக இருந்து அந்த குடும்பத்தை ஒற்றை ஆளாக கேட்டரிங் சர்வீஸ் நடத்தி தாங்கி வருகிறார் பாக்யா. இது பல பெண்களுக்கும் உந்துதலாக இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்கு நீதான் வேணும்.! வீட்டை விட்டு எழிலுடன் ஓடி வந்த அமிர்தா.! அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா.! 1
கணவர் கைவிட்டு விட்டு சென்றாலோ இல்லை விவாகரத்து செய்துவிட்டு சென்றாலோ வீட்டில் தனியாக கிடந்து மூலையில் முடங்கி அழத் தேவையில்லை. தைரியமாக நம் சொந்த காலில் நிற்கலாம் என்கிற கருத்தை பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து காட்டி வருகிறது. இதில் பாக்யாவின் இரண்டாவது மகனாக நடிக்கும் எழிலுக்கு அமிர்தா என்கிற பெண் மீது காதல் இருக்கிறது. அம்ருதா திருமணமாகி சில வருடங்களிலேயே கணவரை இழந்தவர். கணவரின் அம்மா, அப்பாவுடன் வசித்து வந்த அவருக்கு எழிலுடன் காதல் ஏற்பட்டது. அம்ரிதாவுக்கு குழந்தை இருப்பது தெரிந்தும் எழில் அம்ரிதாவை காதலித்து வருகிறார். இந்த நிலையில் இந்த விஷயம் எழிலின் பாட்டி ஈஸ்வரிக்கும், அண்ணன் செழியனுக்கும் தெரியவர அவர்கள் அமிர்தா வீட்டிற்கு சென்று கணவர் இல்லாத உங்கள் மருமகளை என் பேரன் தலையில் கட்டி வைக்க பார்க்கிறீர்களா என்று கோபமாக கேட்டு விடுகின்றனர்.


இதனால் மனமுடைந்து போன அமிர்தாவின் மாமனார் மற்றும் மாமியார் அனைவரும் வீட்டை காலி செய்துவிட்டு தங்களது சொந்த ஊருக்கே திரும்பி சென்றுவிட்டனர். அமிர்தாவை தேடி வரும் எழில் மற்றும் பாக்யாவுக்கு வீடு பூட்டி கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் எழில் அமிர்தாவை தேடி கண்டுபிடித்துவிட்டார் அப்போது போனில் பேசும் பாக்யா தைரியமாக இரு அம்ரிதா எல்லாம் நன்றாகவே நடக்கும் என்று ஆறுதல் கூறுகிறார். எப்படியோ மீண்டும் அமிர்தா எழில் சேர்ந்து விட்டனர் என்று ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்