விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமியில் தற்போது உடனே வீட்டை காலி பண்ணி தரும்படி பாக்கியா மற்றும் எழிலை மிரட்டுகிறார் கோபி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகன் கோபி 25 ஆண்டுகளாக பாக்யாவுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் அவருக்கு பாக்யாவுடன் வாழ பிடிக்கவில்லை. பெற்றோர்களின் கட்டாயத்தால் பாக்கியாவை திருமணம் செய்து கொண்டு இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் அவர் தோழி ராதிகாவை சந்திக்கிறார். பின்னர் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனிக் குடித்தனம் இருந்து வருகிறார். பாக்யா மற்றும் அவரது பிள்ளைகள் கோபி கட்டிய வீட்டில் இருக்கிறார்கள். கோபி 40 லட்ச ரூபாய் செலவு செய்து அந்த வீட்டை கட்டி இருந்தார். தற்போது அந்த வீட்டின் மதிப்பு 70 லட்சம் ரூபாய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒருநாள் எழிலுக்கும் கோபிக்கும் சண்டை வருகிறது. அப்போது 70 லட்சம் ரூபாய் கொடுத்து நானே இந்த வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று தந்தையிடம் சவால் விடுகிறார் எழில். ஆனால் அவரால் அந்த வீட்டை வாங்க முடியவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எழில் வேலை செய்யும் தயாரிப்பாளர், தனது மகளை எப்படியாவது எழிலுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு எழுபது லட்ச ரூபாய் கொடுப்பதாக உறுதி செய்திருந்தார். ஆனால் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினிக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறவில்லை.எழில் இத்தனை நாட்களாக காதலித்து வந்த அமிர்தாவை பாக்கியா கடைசி நிமிடத்தில் அழைத்து வந்து மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். இதனால் செம கடுப்பில் இருக்கிறார் கோபி. இந்த திருமணத்தில் கோபியின் தாய் ஈஸ்வரி மற்றும் கோபிக்கு சுத்தமாக விருப்பமில்லை.
இந்த நிலையில் இன்று கோபி மற்றும் ராதிகா வசிக்கும் வீட்டிற்கு முதல் முறையாக சென்ற கோபியின் தாய் ஈஸ்வரி, “இந்த வீட்டை நீ வாங்க கூடாது, அதற்காக நீ கட்டாயப்படுத்த கூடாது” என்று கேட்கிறார். மேலும் ஊரில் உள்ள அனைத்து சொத்தையும் உன் பெயரிலேயே எழுதி வைத்து விடுகிறேன் இந்த வீட்டை மட்டும் கேட்காதே என்று ராமமூர்த்தி தாத்தாவும் கோபியிடம் கூறுகிறார். ஆனால் பாக்யா வீட்டிற்கு வரும் கோபி, எழில் மற்றும் பாக்யாவை அழைத்து நடுவீட்டில் நிற்க வைத்து, ஊரில் இருக்கும் அனைத்து சொத்தையும் என் பெயர் எழுதி வைத்தால் கூட இந்த வீட்டின் இன்றைய மதிப்பிற்கு ஈடாகாது. எனவே இன்றைக்கே நீங்கள் இந்த வீட்டை காலி செய்ய வேண்டுமென்று கூறுகிறார். இதனால் அதிர்ச்சியில் நிலை குலைந்து போய் நிற்கும் பாக்யா, என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இந்த நிலையில் கோபியை பாக்கியலட்சுமி சீரியல் என்ற ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television