ஐந்து வயதில் தம்பியை இழந்து, பின்னர் பெற்றோர்களை இழந்து, ஒரு அனாதையாக சென்னைக்கு வந்த என்னை வாழ வைத்தது இந்த தமிழ்நாடு தான் என்று தனது வாழ்வில் நடந்த சோகங்களை முதன்முறையாக பகிர்ந்து உள்ளார் பாக்கியலட்சுமி நாடகத்தில் வரும் கோபி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹெட் தொடர்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இந்தத் தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வருபவர் சதீஷ். இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுஜித்ரா. ஆரம்பத்தில் குடும்பப் பாங்கான கதையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் வழக்கம் போல இரண்டு மனைவி தொடராக மாறியது. கோபி தனது கல்லூரி கால காதலியை மீண்டும் பார்த்து அவருடன் இணைவது போன்று கதை நகர்ந்து வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தற்போது இவர்கள் இருவரின் கள்ளக்காதலை பாக்கியா கண்டுபிடித்துவிடுகிறார். இதனால் கோபமாகி பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுகிறார். இப்படியாக இந்த சீரியல் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த நாடகத்தில் கதாநாயகனாக வரும் கோபியை பலரும் சமூக வலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த கதையை உண்மை என நினைத்து பலரும் கோபியின் instagram பக்கத்தில் சென்று நீ எல்லாம் ஒரு மனிதரா? ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? ஒரு நாள் மாட்டுவாய்? எனவும், சிலர் ஒரு படி மேலே போய் கெட்ட வார்த்தைகளிலும் திட்டி வந்தனர். இதனால் கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே டெலிட் செய்து விட்டார். பின்னர் தற்போது மீண்டும் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவக்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே கோபி பல பேட்டிகளில் நாடகத்தை நாடகமாக பாருங்கள் என்னை தனிப்பட்ட முறையில் திட்டாதீர்க.ள் கோபி கதாபாத்திரம் நாடகத்திற்காக அப்படி எடுக்கப்பட்டது ஆனால் நீங்கள் தனிப்பட்ட என்னை திட்டுகிறீர்கள், என்னை திட்டாதீர்கள் என்று பல பேட்டிகளில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் கோபி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஐந்து வயதில் தன் தம்பியை இழந்து, பின்னர் பெற்றோர்களின் இழந்து ஒரு அனாதையாக இரண்டு சட்டை, இரண்டு டவுசர்களை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்ததாகவும், அத்தை வீட்டில் வாழ்ந்தேன் வளர்ந்தேன். எனக்கு பெயர் கொடுத்து, புகழ் கொடுத்து என்னை இன்றும் வாழ வைத்து கொண்டிருப்பது இந்த தமிழ் மொழிதான் என்றும் தமிழ் ஒரு மொழி அல்ல அது எனக்கு தாய், கலாச்சாரம், அது ஒரு ஷக்தி என்றும் அவர் கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7