நீதிபதியை பங்கமாக கலாய்த்து தள்ளும் ஈஸ்வரி.! பயந்து நடுங்கும் கோபி மற்றும் பாக்யா.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் செழியன் மற்றும் ஜெனி இருவரின் விகாரத்து கோரிய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வருகிறது. அப்போது ஈஸ்வரி எழுந்து நீதிபதியுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் பாக்கியாவும் கோபியும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதியை பங்கமாக கலாய்த்து தள்ளும் ஈஸ்வரி.! பயந்து நடுங்கும் கோபி மற்றும் பாக்யா.! ப்ரோமோ இதோ.! 1
கோபி மற்றும் பாக்கியாவின் மூத்த மகனாக இருக்கும் செழியனுக்கும் ஜெனிக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. செழியன் மாலினியை சில காலம் காதலித்து வந்ததை தெரிந்து கொள்ளும் ஜெனி அவரிடமிருந்து பிரிந்து தனது தந்தை மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். ஜெனிக்கும் செழியனுக்கும் விவாகரத்து கோரி தற்போது ஜெனியின் தந்தை கோர்ட்டில் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகிகின்றனர். அப்போது ஜெனியை அடித்து துன்புறுத்துவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் கேட்ட ஈஸ்வரி கோபத்திலும் நீதிமன்றத்திலேயே எழுந்து ஜெனியின் தந்தையிடம் சண்டை போடுகிறார்.


மேலும் நீதிபதியையும் ஈஸ்வரி எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீதிபதி, “நீங்கள் இவ்வாறு செய்தால் கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடுவீர்கள்” என்று எச்சரிக்கிறார். ஆனால் அது புரியாமல் அவரையே ஈஸ்வரி கலாய்த்து கொண்டிருக்கிறார். இதனால் பாக்யாவும் கோபியும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்