விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. குடும்பப் பாங்கான நாடகத் தொடர்களை எடுப்பதில் விஜய் டிவி முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் பெங்காலி மொழி தொடரான ஸ்ரீமோயி என்கிற தொடரை மறு உருவாக்கம் செய்து பாக்கியலட்சுமி என்கிற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்கிற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் மற்றும் இன்னும் பலர் நடித்து வருகின்றனர். ஓர் இல்லத்தரசியின் கதை என்கிற வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டது. இதில் பாக்கியலெட்சுமிக்கு அவரது கணவர் விவாகரத்து கொடுத்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். கோபியியுடன் மகள் இனியாவும், அப்பா ராம மூர்த்தியும் வந்து வசித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கதையில் பாக்கியா அம்மாவாக, மனைவியாக, மருமகளாக, மாமியாராக பல பொறுப்புகளை சுமக்கின்றார். ஆனால் அவர் படும் பாடுகள் என்ன. சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை. தற்போது கணவரின் இரண்டாவது மனைவி ராதிகா செய்த சதியால் அவருக்கு கிடைக்க இருந்த கேண்டீன் காண்ட்ராக் அவரை விட்டுப் போய்விட்டது. இதனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தான் நடத்தி வரும் மசாலா கம்பெனி வாசலிலேயே அவர் உணவுகளை விற்கும் தொழிலை தொடங்குகிறார். ஆனால் அங்கும் அவருக்கு பல சிக்கல்கள் வருகிறது. இப்படியாக தொடர்ந்து பல சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்தி வருகிறார் பாக்யா.
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்யா தனது தனது மூத்த மகனின் மனைவியான ஜெனி கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கு கோபி தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வருகை தருகிறார். அப்போது அங்கு இருப்பவர்கள், இது என்ன? திருமணம் ஆன பிள்ளைகளை வைத்துக்கொண்டு இப்படி வந்து நிற்கிறார் என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. பாக்கியாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ராதிகாவை அழைத்து வருகிறார் கோபி. இந்த பரபரப்பான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Code Embed Credits: Vijay Television