“நான் ஜெனி மேல உயிரே வச்சிருக்கேன்” நீதிபதி முன்பு கைகூப்பி கதறி அழுத செழியன்.! ப்ரோமோ உள்ளே

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலெட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஜெனி மற்றும் செழியன் இருவரின் விவாகரத்து வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. அப்போது ஜெனியிடம் கண்கலங்கி செழியன், “நான் செய்தது தவறுதான்” என்று கண் கலங்கி மன்னிப்பு கேட்கிறார். இதனால் ஜெனி மனம் மாறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நான் ஜெனி மேல உயிரே வச்சிருக்கேன்" நீதிபதி முன்பு கைகூப்பி கதறி அழுத செழியன்.! ப்ரோமோ உள்ளே 1

பாக்யாவின் மூத்த மகனாக இருக்கும் செழியன் மாலினியுடன் சேர்ந்து கொண்டு சில காலம் தவறான வழியில் சென்று விட்டார். இதை தெரிந்து கொள்ளும் செழியனின் மனைவி ஜெனி, கோபத்தில் வீட்டிலிருந்து வெளியேறி தனது தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஜெனியின் தந்தை செழியனை விவாகரத்து செய்யுமாறு பிடிவாதமாக இருக்கிறார். ஜெனிக்கு இதில் விருப்பம் இல்லை என்ற போதும் தந்தைக்காக இதற்கு ஒத்துக்கொள்கிறார்.

இந்த நிலையில் கோர்ட்டில் அவர்களின் விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது செழியன் ஜெனியை பார்த்து, “நான் செய்தது தவறுதான், என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி கைகூப்பி கண்கலங்கி அழுகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்